உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

❖ மறைமலையம் – 27

பிறிதன்று. அங்ஙனமாயின் அறிவு நூல்களில் அவர் அருவமென்றும் ஒவ்வோரிடங் களிற் கூறப்படுதல் என்னை யெனின், மக்களுடைய ஊனக் கண்களுக்கு அவருடைய அருளுருவம் புலப்படமாட்டா தாகலின் அவ்வாறு சொல்லப்பட்டதென்க. அருட்கண்ணு டையார்க்கு அவன் அருளுருவம் விளங்கித் தோன்று மென்பதற்குத் திருஞான சம்பந்தப் பெருமான் ஏதும் அறியாக் குழவிப் பருவத்தே அவன்றன் திருவுருவத்தைக் கண்டு பாடியதும்,

அவனருளே கண்ணாகக் காணினல்லால் இப்படியன் இவ்வுருவன் இவ்வண்ணத்தன் இவனிறைவ னென்றெழுதிக் காட்டொணாதே

என்ற திருநாவுக்கரசுகளின் அருமைத் திருமொழியுமே போதிய சான்றாமென்க.

என்று இத்துணையுங் கூறியவாற்றால், உருவமானது பெரிதும் பாராட்டற்பாலதேயன்றி இழிக்கப்படத்தக்கதன் றென்பதும், அறிவு விளக்கமெல்லாம் உருவத்தைப் பற்றியே நிகழுமாதலால் அஃது அழியாத உருவ அமைப்புடைய தாகவே நிலைபெறுமென்பதும் உலகின்கட் காணப்படும் எல்லா வடிவங்களின் தோற்றத்திற்கும் நிமித்த காரணமான கடவுளின் எல்லையற்ற அறிவின்கண் எல்லா உருவங்களும் உண்டென்பதும், கடவுள் அருட்குணமுடையராயும் அறிவுருவமுடையராயும் விளங்குவரல்லது நிர்க்குணமாயும், அருவாயும் ருப்பரல்லரென்பதும், எவ்வெவர் எவ்வெவ் உருவிற் கடவுளை வழிபடினும் அவ்வவர்க்கு அவ்வவ் உருவிற்கேற்பக் கடவுள் தமது அருளை வழங்குவரென்பதும் எடுத்துக் காட்டப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/111&oldid=1591081" இலிருந்து மீள்விக்கப்பட்டது