உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

5. சீவகாருணியம்

கொல்லாமற் கொன்றதைத் தின்னாமற் குத்திரங் கோள்களவு கல்லாமற் கைதவ ரோடிணங் காமற் கனவிலும்பொய் சொல்லாமற் சொற்களைக் கேளாமற் றோகையர் மாயையிலே செல்லாமற் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே

‘சீவ காருணியம்' என்பதுஇரண்டு சொற்களால் ஆகிய ஒரு சொற்றொடராகும்.இதனைப் பிரித்தால் சீவ என்றும் காருணியம் என்றும் இரண்டு சொற்கள் பெறப்படும்.இனிச் சீவர்கள் என்பன யாவையோவென்றால்; தொட்டால் அறியும் ஓர் அறிவு மட்டும் உடை ய புல், மரம், செடி, கொடி முதலியனவும், தொட்டால் அறிவதோடு நாவினாற் சுவைக்கும் சுவையுணர்வும் உடைய ஈரறிவு உயிர் களான நத்தை, சங்கு, கிளிஞ்சில் முதலியனவும், தொட் டறிந்து நாவாற் சுவைத்த லொடு மூக்கால் நாற்றத்தை யுணரும் மூவறிவு உயிர்களான கறையான், எறும்பு, ஈசல் முதலியனவும், தொடுதலுஞ் சுவைத்தலும் முகருதலும் என்னும் உணர்வுகளோடு கண்ணாற் காணும் அறிவு முடைய நான்கறிவு உயிர்களான நண்டு, உயிர்களான நண்டு, தும்பி, வண்டு, தேனீ முதலியனவும், தொடுதல் சுவைத்தல் முகருதல் காணல் என்னும் நான் குணர்வுகளோடு காதாற் கேட்டுணரும் அறிவும் உடைய ஐயறிவு உயிர்களான விலங்குகள் பறவை கள் காட்டு மிராண்டிகள் முதலியனவும், தொடுதல் சுவைத் தல் முகருதல் காண்டல் கேட்டல் என்னும் ஐந்தறிவுகளோடு நல்லதிது தீயதிது என்று பகுத்துணரும் மனவுணர்வும் உடை ய ஆறறிவு உயிர்களான மக்களும் என்று சொல்லப் பட்ட இந்த ஆறு வகையில் அடங்கிய உயிர்கள் அத்தனையு மேயாம்.

இனிக் 'காருணியம்' என்பது அருள் அல்லது இரக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/112&oldid=1591082" இலிருந்து மீள்விக்கப்பட்டது