உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

89

சமும் கொலைத் தொழிலும் உடையனவாய் இருக்கின்றன. இரக்கம் எந்த உயிர்களிடத்து இருக்கின்றதோ அந்த உயிர்கள் னிய மென்னெஞ்சமும் எல்லாரும் விரும்பத்தக்க இனிய செய்கையும் உடையனவாய் இருக்கின்றன.இதனாலே தனாலே தான் இரக்கம் இல்லா உயிர்களின் தன்மையை விளங்கின்றன்மை என்றும், இரக்கம் உள்ள உயிர்களின் றன்மையைக் கடவுட் டன்மை என்றும் வழங்கி வருகின்றோம்.இனி மக்களின் யற்கையோ இவ்விரண்டிற்கும் நடு நிற்கும் தன்மை வாய்ந்ததாய் இருக்கின்றது. பசிநோய் தீரும் பொருட்டுக் காடிய வன்னெஞ்சம் உடையராய்ப் பிற உயிர்களிடத்துச் சிறிதும் இரக்கம் ரக்கம் இன்றி அவற்றைக் கொலை செய்து அவற்றின் ஊனைத் தின்பவர்கள் விலங்கின் றன்மையை அடைகின் றார்கள். தமக்குக் கடும்பசி உண்டான காலத்தும் தம்முயிர் போல் மன்னுயிரை எண்ணி அவற்றிற்குச் சிறிதுங் தீங்கு செய்யாமல் தமக்குக் கிடைத்த காய், கனி, கீரை, கிழங்கு, பயறு முதலியவற்றை உணவாகக் கொண்டு எல்லா உயிர் களிடத்தும் இரக்கம் வைத்து ஒழுகுபவர்கள் கடவுட் L டன்மையை அடைகின்றார்கள். எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்குந் தலைவரும் தாய் தந்தையருமாய் விளங்கும் முழுமுதற் கடவுள் அளவிறந்த இரக்கம் உடையவராய் இருக்கின்றார். அங்ஙனம் அளவிறந்த இரக்கம் உடையவரான கடவுளை அடைந்து அவரது பேரின்பத்தை நாம் நுகருதற்கு நாமும் அவர்போல் அளவிறந்த இரக்க இயல்பாகிய கடவுட்டன்மையை அடைதல் வேண்டும். எவர்கள் மென்மையான இனிய இரக்க இயல்பு உடைய வராகின்றார்களோ அவர்களுக்கே எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவான் என்பது அருட்பெருஞ் செல்வரான தாயுமான சுவாமிகள்,

கல்லால் எறிந்துங்கை வில்லால் அடித்துங் கனிமதுரச் சொல்லாற் றுதித்தும்நற் பச்சிலை தூவியுந் தொண்டரினம் எல்லாம் பிழைத்தன அன்பற்ற நான்இனி ஏதுசெய்வேன் கொல்லா விரதியர் நேர்நின்ற முக்கட் குருமணியே.

என்னும் செய்யுளிற் கொல்லாவொழுக்கம் உடையவர்க்கே றவன் நேர்நின்று அருள்புரிவான் என்று

கூறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/114&oldid=1591084" இலிருந்து மீள்விக்கப்பட்டது