உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

❖ - 27✰ மறைமலையம் - 27

வாற்றானும், திருவருட்பிரகாச வள்ளலாரான இராமலிங்க சுவாமிகள்,

வன்புகலந் தறியாத மனத்தோர் தங்கள் மனங்கலந்து மதிகலந்து வயங்கா நின்ற என்புகலந் தூன்கலந்து புலன்க ளோடும் இந்திரிய மவைகலந்துள் இயங்கு கின்ற அன்புகலந் தறிவுகலந் துயிரைம் பூதம்

ஆன்மாவுங் கலந்துகலந் தண்ணித் தூறி இன்புகலந் தருள்கலந்து துளும்பிப் பொங்கி

எழுங்கருணைப் பெருக்காறே இன்பத் தேவே.

என்னும் அருட்பாவினால் கொலைத் தொழி லில்லாதவர் களின் உடம்பு உயிரெல்லாம் இறைவன் கலந்து நின்று பொலிகுவான் என்று கூறிய வாற்றானும் நன்கு விளங்கும்.

இன்னும் பேர் இரக்க வியல்பான கொல்லாமை உடையவர்களுக்கு எல்லா நல்லியுல்புகளுந் தாமே வந்து பொருந்து மெனவும், அஃது இல்லாதவர்களுக்கு எல்லாத் தீய தன்மைகளும் மேன்மேற் கிளைத்தெழுந்து அவர்களைக் கொடிய விலங்கினங்களாக்கி விடுமெனவும் இனிது விளக்கும் பொருட்டே தம் தாயுமான சுவாமிகள்,

கொல்லாமை எத்தனை குணக்கேட்டை நீக்கும்அக் குணம் ஒன்றும் ஒன்றிலேன்பாற்

கோரம்எத் தனைபட்ச பாதம் எத்தனைவன்

6

குணங்க ளெத்தனை கொடியபாழ் கல்லாமை எத்தனை அகந்தைஎத் தனைமனக்

கள்ளம் எத்தனை உள்ளசற்

காரியஞ் சொல்லிடினும் அறியாமை எத்தனை கதிக்கென் றமைத்த அருளிற்

செல்லாமை எத்தனைவிர் தாகோட்டி என்னிலோ

செல்வ தெத்தனை முயற்சி

சிந்தைஎத் தனைசலனம் இந்த்ரசா லம்போன்ற தேகத்தில் வாஞ்சை முதலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/115&oldid=1591085" இலிருந்து மீள்விக்கப்பட்டது