உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

139

பசித் தீயானது எம்மை வருத்த அதற்காற்றாது யாம் வாய் திறந்து அழ அதனைக் கண்டு அன்புடையளாகிய அன்னை எம்மை எடுத்துப் பாலூட்டினாள். விலங்குகளோ தாம் பிறந்தவுடனே அங்ஙனந்தாயினுதவியும் வேண்டாது தாமே யறிந்து தாய்முலை யுண்ணுகின்றன. இவ்வாறு விலங்குகளைக் காட்டிலும் அறிவு விளங்கப்பெறாது கிடந்த யாம் பயிற்சி வழியால் எம் மனம் சிறிது உலக வுருவத்தைப் பற்ற அதன் புறத்தேயிருந்த எம்மறிவு சிறிது விளங்கி, எமக்கு முலை தருவாள் இவளென்று சிறிது காலமெல்லாம் அறிந்து, அதன்பின் அங்ஙனந் தருவாளுந் தாயென்றறிந்து, அவள் அவ்வாறு தருதலும் பசியெடுத்து யாம் அழுதலாலென்றும் அறிந்து, அதன்பின் யாம் உண்ணுவதும் பால் என்று அவள் பன்முறை யுரைப்பதனாலறிந்து, அதன் பின் எம் அன்னை 6 யையும் எம்மையும் பாதுகாப்பவனெல்லாந் தந்தை யென்பதும் அவள் அறிவிப்ப அறிந்து இவ்வாறு முறை முறையே எம்மறிவு விளங்கப் பெறுவேமாயினேம். இதனால் எமக்கு அறிவு விளங்குவதற்கு ஏதுவாயிருந்த முதன் முயற்சி பசி ஒன்றேயாம் என்பதூ உம் னிது பெறப்படும்.இனி இங்ஙனம் அறிவு வளருந்தோறும் யாம் புதுவதாக அறிந்தது அறிவாகவும், முதலில் எழுந்த பழையவறிவு எமக்கு அறியாமையாகவுங் காணப்பட்டன. இது பற்றியே, ஆசிரியர் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும்,

அறிதோ ரறியாமை கண்டற்றாற் காமஞ் செறிதோறுஞ் சேயிழை மாட்டு

என்று திருவாய்மலர்ந்தருளினார்.

(குறள் 1110)

இனி இங்ஙனங் குழவிப்பருவ முதற்கொண்டு முறை முறையாய் எமக்கு அறிவு விளங்கப்பெறுவதே உலக வியற்கை. அவ்வியற்கைக்கு மாறாக யாம் பத்து ஆண்டில் அறிய வேண்டுவனவற்றை முதல் ஆண்டிலேயே ஒருங்கறிந் திடுவோ மாயின், அங்ஙன மறிதலை ஆன்றோர் 8தெய்வத் தன்மை என்று தம்முள் வழங்குவர். மேலும், உலகிய லுணர்ச்சியும், அவ்வுணர்ச்சியில்லாமையாற் பாவனை செய்யும் ஆற்றலும் வாய்க்கப் பெறாத எமது குழவிப் பருவத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/164&oldid=1591134" இலிருந்து மீள்விக்கப்பட்டது