உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

❖ ❖ மறைமலையம் – 27

வியப்புடைத்தாய புதுக்கோலமொன்றைக் கண்டு அதன் உண்மையைப் பொருள் விழுப்பந்தோன்றப் பலவாறு புனைந்து செய்யுட்களானும், சிறந்த மேற்கோளுரைகளானும் விரித்துப் பேசிடுவேமாயின், அதனைப் பொய்யென்றும் பாவனை யென்றும் உருவெளித் தோற்றமென்றும் எவரேனுஞ் சொல்ல ஒருப்படுவரோ? ஒரு காலத்தும் ஓரிடத்தும் ஒருப்படவே மாட்டார், இங்ஙனம் எமது செந்தமிழ் நாட்டில் நிகழ்ந்த அரும்பெரும் புதுமை யொன்றனை எடுத்துக்காட்டி நிறுவி, அவ்வாற்றால் திருவுருவ வழிபாட்டு நன்முறையின் உண்மைத் தன்மை காட்டுவாம்.

சீர்காழியென்னும் திருநகரிற் சிவபாதவிருதய ரெனும் அந்தணப் பெரியார் ஒருவர் ஏறக்குறைய ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்குமுன் இருந்தார். அக்காலத்திற் சமண சமயிகள் யாண்டும் பெருகி வந்தனர். அச்சமண சமயிகள் கொல்லாமை முதற் சிறந்த அறநெறிகளைப் பிறழா மனவெழுச்சியுடன் கைக்கொண்டு அங்ஙனந் தாங் கைக் கொண்ட அச்சிறந்த அறத்தின் மாட்சியை மக்களெல் லார்க்கும் எடுத்துக் கூறி அவர்க்கெல்லாம் உள்ளக் கவர்ச்சியை எழுப்பி அவ்வாற்றா லவரைத் தம்மதத்திற்குத் திருப்பிக் கொண்டு செல்வாராயினர். இங்ஙனஞ் சில நாளெல்லாஞ் செல்ல அச்சமண சமயம் யாண்டும் பரந்துவிரிவதாயிற்று. தஞ்சமயம் இவ்வாறு எங்கும் பரவவே மற்றைச் சமயங்களைப் பின்பற்றி யொழுகு வோர் தொகை சுருங்குவதாயிற்று. சமணம் பளத்தம் முதலிய யொழித்து ஒழிந்தசைவம், வைணவம், பாசுபதம், சாத்தம், கௌமாரம், காணாபத்தியம் முதலிய சமயங்களெல்லாம் தெய்வம் ன்றுண்டெனக் காண்டு வழிபடுவனவாம். சமணம் பௌத்தம் என்பனவோ அறவொழுக்கங்களிற் சிறந்தன சில கைப்பற்றி ஒழுகும் அவ்வளவேயல்லது, அவை தெய்வம் ஒன்று உண்டெனக் கொண்டு வழிபடும் மெய்ச்சமயங் களல்லவாம்.

அச்சமயங்களை

மற்று அவை தெய்வமில்லென்று உரைக்கும். பொய்ச் சமயங்களே யாம். ஆங்கிலப் புலவர் சிலர்; கௌதமர் கடவுள் வழிபாட்டைக் குறிப்பிட்டாயினும், கடவுளைக் குறிப்பிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/165&oldid=1591135" இலிருந்து மீள்விக்கப்பட்டது