உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

141

டாயினும் ஏதும் உரையாமை பற்றி அவரை நாத்திகரெனக் கூறுதலமையாது, அவர் ஆத்திகருமாகலாம் என்று உரைப்ப துண்மையே யாயினும், மொழிநூற் புலவர் மாக்ஸ்மூலர் பௌத்த சமயங்கள் பலவும் கடவுள் இன்றென நிலையிட் டுரைப்பனவாம்” எனக் கூறுதலானும் ’பிராஞ்சு தேயத்துத் தத்துவநூற் புலராகிய பார்த் என்பவர் "பௌத்த சமணக் கோட்பாடுகள் ஒரு தலையாகக் கடவுள் இன்றெனக் கூறுவன வாம்’ எனத் துணிவு தோன்றக் காட்டுதலானும், அரிய பல ஆராய்ச்சி செய்து வடமொழி நூலுரை வரலாறு புதுவதாக எழுதி வெளியிட்ட மாக்டனல் புலவரும் "பெளத்தமும் சமணமும் சாங்கிய நூலைப் போலவே கடவுளினிருப்பை மறுக்குங் கோட்பாடுடையவாம்” என்று அங்ஙனமே துணிபு ஒருப்படுத்தலானும், சிவஞானபோதம், சிவஞான சித்தியார் முதலிய தத்துவ முழுமுதற் றமிழ் நூலுரைகளின் கண்ணும் அவ்வாறே அவர் நாத்திக சமயிகளென்று வைத்து மறுக்கப் படுதலானும் பௌத்தரும் சமணருமாகிய அவ் விருவகைச் சமயிகளும் நாத்திக சமயிகளேயாமென்பது ஒருதலை யென்றுணர்க.

10

ங்ஙனங் கடவுளின்றெனக் கொண்டு ஒழுகுவாராகிய சமண சமயிகள், இறைவனை உண்மையன்பான் வழிபடும் ஏனைச் சமயிகளைக் காண்டொறும்மனஞ் சிறிதும் பொறா ராகி மற்று அவரை யெல்லாந் தஞ்சமயத்தின்கட் படுக்கும் நோக்கம் பெரிதுடைய ராயினார். அந்நோக்கம் முதிரவே கொல்லாமை, பொய்யாமை முதலாகத்தாங் கைக்கொண்டு போந்த சில அறத்தியல் வரம்பு கடந்து, தீய நெறியா னெல்லாம் ஏனைச் சமயிகளை வருத்தத் தொடங்கினார். தன் கட்டளையாற் சட்டதிட்டங்களேற் படுத்தி அவற்றிற் கேற்ப ஒழுகுவார்க்கு நன்மையும் அவற்றிற்கு ஏலாதன செய்தொழுகு வார்க்கு ஒறுத்தலுந் தந்து நெறிப்படுத்து வானாகிய அரசனையில்லாத குடிகள் தாந்தம் விரும்பிய வாறே சில சட்டதிட்டங்களேற்படுத்திக் கோடலும், தமக்கு அவை ணங்காத வேறு காலங்களில் தம்முன்னை ஏற்பாடுகளை மனம் போனவாறு புரட்டி வேறு வேறு இயற்றிக் கொண்டு தம்முட் கலாம் விளைத்தலும் நிகழக் காண்கின்றாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/166&oldid=1591136" இலிருந்து மீள்விக்கப்பட்டது