உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

❖ * மறைமலையம் – 27

இதுபோல, இறைவனொருவன் உண்டெனக் கொண்டு அவன் கட்டளையிட்டருளிய நல்வினைகளைச் செய்யின் நன்றாம்.அவன் வேண்டாவென்று விலக்கிய தீவினைகளைச் செய்யின் தீதாம் என்னும்மன வுறைப்பில்லாத பொய்ச்சமயி கள் தாம் ஒரோவொரு காலங்களில் உலகியல் அறநெறி பிறழாது ஒழுக உடன் படுவாராயினும், தமக்கு அவ்வறநெறி களியையாத பிற காலங்களில் தாந்தாம்விரும்பியவாறே முன்னை அறவொழுக்க வரம்பழித்துத் தீவினை செய்யுந் துணிவுடை யாராவர். இங்ஙனமே, சமணசமயிகள் அக் காலத்துத் தம்மோடு ஒருங்கு இருந்த சைவர், வைரவர், பாசுபதர் முதலிய ஆத்திக சமயிகளுக்குப் பெருந்தீது செய்யும் கரவு பலவுடையரானார். திருநாவுக்கரசு நாயனார் சமண சமயந்துறந்துசைவ சமயந் தழுவிய ஞான்று சமண ரொருங்கு கூடித் தம்மரசனால் அவரை நீற்றறையில் இடுவித்தும், கல்லிற் கட்டிக் கடலில் வீழ்த்தியும் யானைக் காலில் இடறுவித்தும், நஞ்சம் உண்பித்தும் புரிந்த தீதுகள் நம்மேற் கோள்களை இனிது நிறுத்துவனவாம் அல்லவோ? அமைதித் தன்மைக்கு ஓர் உறையுளாய் விளங்கிய அப்பரே தாம் சமணராற்பட்ட துன்பங்களைத் தாமே தந்திருப்பதி கங்களில் ஆங்காங்குக் குறிப்பிடுமாறுங் காண்க. இவ்வாறே, அவர்கள் தங்காலத் திருந்த பாண்டியனை யுள்ளிட்ட முடிவேந்தர்களை யெல்லாந் தஞ் சமயங்களிற் றிருப்பி; அவ்வரசரது வலியால் ஏனை ஆத்திக சமயிகள் வழிபடுந் திருக்கோயில்களை அடைப் பித்தும், திருமடங்களில் தீக் கொளுவியும், அவரைக் கண்டால் ‘கண்டு முட்டு' என்றும், அவரைக் குறித்து ஏதேனுங் கேட்டாற் ‘கேட்டு முட்டு' என்று சொல்லியும் பலவாறு இன்னலியற்றி வந்தனர். இங்ஙனஞ் செய்து போந்த கால்லாமை முதற் சிறந்த அறங்களை மேற்கொண்டு ஒழுகினாரெனல் யாங்ஙனம்? ஆகவே, இவ்வாறெல்லாந் தீதுபுரியும் ஒழுகலாறுடையரான சமணர் யாண்டும் பரவி நிரம்புதலும், சைவ சமயிகள் தீயினால் வளைக்கப்பட்டு இடையிற் கிடந்து துடிக்கும் புழுப்போற் பெரியதோர் இடருழவா நின்றார்.

சமணர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/167&oldid=1591137" இலிருந்து மீள்விக்கப்பட்டது