உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

143

அக்காலத்திற் சிவபெருமானிடத்து உண்மையன்புடை யரான சிவபாதவிருதயர் என்னும் அச்சைவ அந்தணர் தீயரான சமணரொழியவுஞ் சைவம் யாண்டும் பரந்து ஒளிரவுஞ் செய்யவல்ல தெய்வமாட்சியுடைய மகப்பேறு தமக்குக் கிடைக்குமாறு தவங்கிடந்தார். அவர்க்குச் சில ஓராண்மகப்பேறு கிடைத்தது.

நாட்களிளெல்லாம்

அவ்வாண் மகவுக்கு மூன்றாம் ஆண்டு செல்கின்ற காலத்திற் சிவபாதவிருதயர் என்றும்போல அச்சீர்காழி நகரிலுள்ள சிவபிரான் கோயிற் றிருக்குளத்தில் தம் நாள் வினைகளை வீட்டிலிருந்து புறம்போதுவார்,

முடித்தற்பொருட்டு

சிறுகுழந்தையாயிருக்கும்

அப்பிள்ளையாரும் அழுது கொண்டே பின்றொடர்தலைக் கண்டு பலவாறு அமைவுரை கள் சொல்லி யிருத்தியுங் கேளாமல் வர, வருகவென்று உடன் அழைத்துச் செல்வா ராயினர். சென்று குளக்கரை மருங்கு சேர்ந்து அக்கரையின்மேற் பிள்ளையாரை யிருத்தித், தாம் நீரிலிறங்கி நீர்க்குள் மூழ்கியிருந்து செய்யும் வழிபாட்டைச் செய்வாராயினார்.

அங்ஙனந் தந்தையார் நீர்க்குள் மூழ்கி நெடுநேர மிருப்பவே, அவரைக் காணப்பெறாத பிள்ளையார் அம்மே! அப்பா! என்று கூவி அழத் தொடங்கி னார் அவ்வழுகையைக் கண்டு மனம் பொறாராகிக் கோயிலினுள் எழுந்தருளி யிருக்குஞ் சிவபிரானும் உமைப் பிராட்டியாரும் பிள்ளை யாரிடம் போந்து அவரழுகை தீர்த்துக் கண்ணீர் துடைத்து, அம்மையார் தங் குமிழ்முலையிற் கொழும்பால் கறந்து அதிற் சிவஞானங் குழைத்துப் பொற்கிண்ணத்தாலூட்டவும், அப்பனார் அவரழுகை தீரத்தடவிஇன்சொற் சொல்லவும் பிள்ளையார் பொற்கிண்ணத்திற் பாலுண்ட வண்ணமாய் மகிழ்ச்சி யுற்றிருந்தார். இதற்குள் நீரில் மூழ்கியிருந்த தந்தையார் ஆண்டுத்தாஞ் செயற் பாலவான வழிபாடுகளை இனிது முடித்துக் கரையேறி வந்துபிள்ளையார் கையிற் பொற் கிண்ணம் வைத்திருத்தலும்அவர் உடம்பெல்லாம் பால் வழிந்திருத்தலுங் கண்டு வெகுண்டு 'அடா! நீ யார் தந்த பாலையுண்டாய்? உனக்கு எச்சின் மயங்கப் பாலூட்டி னாரரைக் காட்டுக’என்று உரப்பிக் கையில் ஒருசிறுகோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/168&oldid=1591138" இலிருந்து மீள்விக்கப்பட்டது