உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

❖ ❖ மறைமலையம் - 27

எடுத்துக் கொண்டுகேட்டார்.கேட்டலும், பிள்ளையார் அஞ்சி ‘எனக்குப் பாலூட்டினார்’ இதோ! மழவிடை யமர்ந்த பிரானும் பிராட்டியாருமாம்' என்று சுட்டித்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன் ஏடுடைய மலரான் முனை நாட்பணிந் தேத்த வருள்செய்த பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே

என்று கட்டளையிட்டருளினார்.

இவ்வரலாறு பெரியபுராணத்தின்கண் விரிவாக எழுதப்பட்டிருத்தல் கண்டுணர்க.

இனி,

உலகியலுணர்ச்சியும்

பாவனை

செய்யும் ஆற்றலும் வாய்ப்பப் பெறாத குழந்தைப் பருவத்தினராகிய ஞான சம்பந்தப்பிள்ளையார்க்கு எதிரே இறைவன் அவர்க்கு அருள் செய்தற்பொருட்டுத்தாங்கி எழுந்தருளிய அருட் கோலம் உருவெளித் தோற்றம்போற் பொய்யாய் ஒழிந்திடு மென்றல் யாங்ஙனம்? அல்லதூஉம், மூன்றாண்டு செல்கின்ற அக்காலத்திற் செந்தமிழ்ச் சுவையும் மெய்ப்பொருள் நுட்பமும் பொதுளத் “தோடுடைய செவியன்” என்னுந் திருப்பதிகங் கட்டளை யிட்டருளியதுதான் என்னை? சிற்றறிவுஞ் சிறு தொழிலு முடையேமாகிய எங்குழந்தைகள் மூன்றாண்டு சல்கின்ற அக்காலத்திலேதான் மழலை மொழிகள் சில வுரைத்து எம்மையெல்லாம் உவப்பிக்கின்றன; அக்காலத்திலே தான் தளர்ந்து தளர்ந்து நடந்து செல்லு கின்றன; அக் காலத்திலேதான் 'அம்மே' என்றும், 'அப்பா' என்றும், 'சோச்சி' என்றும், 'பாச்சி' என்றுந் தமக்கு வேண்டும் பொருள்களைச் சுட்டுகின்றன;

அக்காலத்திலே தெய்வம் உண்டு என்னும் உணர்ச்சி அவைகட்கு இன்றாம்; அத்தெய்வமுஞ் சிவபெருமானே யாமென்னு முணர்ச்சியு மின்றாம்; அச்சிவபெருமான் திருத்தேவியார் உமை என்னும் உணர்ச்சியுமின்றாம்; அச் சிவன் திருவடையாளங்கள் 'தோடு' ‘விடை’ ‘கொன்றை முதலியவா மென்னும் ஆராய்ச்சியு மின்றாம்; ஆகலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/169&oldid=1591139" இலிருந்து மீள்விக்கப்பட்டது