உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

145

இவ்வணுர்ச்சி வேறுபாடெல்லாம் நிகழ்ந்ததற்கு ஓர்இயைபு வேண்டுமெனின்; அற்றன்று, சிவ பாதவிருதயரென்னுந் தந்தையார் சிவபெருமானிடத்து மிக்க அன்புை யா ரென்பது பெறப்படுதலால் அவர் தமது இல்லத்திலே சிவனை வழுத்துகின்ற காலங்களிற் சொல்லுஞ் சொற்களின் பொருள்கள் மிகத் தெளிவாகிய அப்பிள்ளையார் மூளையிற் பதிந்திருந்து பின்னொரு நாட்புறம்போந்தன வென்பார்க்கு, அங்ஙனம் அவ்வுணர்வு மட்டுமே புறம்படுதல் பொருந்து வதா மன்றி அம்மையார் தமக்குப் பொன்வள்ளத்திற் பால் கறந்து ஊட்டினாரென்றலும், அது கண்டு தந்தையார் சிவபாத விருதயர் வெகுண்டு தம்மை வினவியபோது இறை வனையும் இறைவியையுஞ் சுட்டிக் காட்டித் திருப்பதிகங் கட்டளை யிட்டருளினா ரென்றலும் பிறவும் பொருந்து மாறு போதராமையின் அவர் கூற்றுப் போலியாமென்று மறுக்க. அற்றேல் அஃதாக, "தோடுடைய” என்னும் அத் திருப்பதிகத் திற் பிள்ளையார் தமக்கு றைவி அங்ஙனம் பொற் கிண்ணத்திற் பால் கறந்தூட்டினாளென்றும், என்றும், சிவபாத விருதயர் அஃதுணராமற் றம்மை வெகுண்டு வினாவிய போதுஇறைவனையும்இறைவியையுந் தாஞ் சுட்டிக் ஓதிற்றிலராலெனின்; அறியாது கூறினாய், "மண்ணினல்ல வண்ணம்" என்னுந் திருப்பிரம புரப்பதிகத்தில்,

6

ளயி

காட்டினாரென்றும்

போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல் லாதெனத் தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகர்ப்

பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே

என்னுஞ் செய்யுளிற் பிள்ளையார் தாமே தமக்கு இறைவன் செய்த அருட்டிறத்தைக் கிளந்தெடுத்து உரையா நிற்பவும், அதனை ஆராய்ச்சி செய்து உணரமாட்டாது உரைத்தல் இழுக்குரையாமென்க. இனி அச்செய்யுட் பொருள் ஒருசிறிது உரைக்கின்றாம்.

போதையார் பொற்கிண்ணத்து அடிசில் - இதழ்விரிந்த தாமரை மலரைப் போல் வாயகன்று செவ்வென விளங்கும் பொன் வள்ளத்தில் உமையம்மை கறந்து ஊட்டிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/170&oldid=1591140" இலிருந்து மீள்விக்கப்பட்டது