உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

147

இருந்தது - உயிர்கள் தன்னை வழிபட்டு உய்யும் பொருட்டுத் தானே தன் பெருமைத் தன்மைகளைச் சுருக்கிக் கொண்டு அருளே திருமேனியா வெழுந்தருளியிருந்த திருநகரம்; கழுமல வளநகர் - தன்னை வந்தடைந்த உயிர்களின் மும்மலங் கழுவித் தூய்மை செய்கின்ற ஒரு பெருந்தன்மையாலே 'கழுமலம்' என்று பெயர் பெற்ற வளவிய நகரமாம்; கழுமலநகர் - சீகாழி; பிள்ளையார் தமக்கு அருள் செய்யும் பொருட்டு இறைவன் தாங்கி வந்த அருட் கோலத்தின்கட் குழையிடப் பட்ட திருச் செவியைச் சுட்டித் "தோடுடைய செவியன்' சவியன்" என்று பதிகங் கட்டளையிட்டருளியவாறு போலவே, ஈண்டுங் “காதையார் குழையினன்” என்று குறிப் புரைத் தருளினார், இது கிடக்க.

இனி, நீர் கூறிய வழக்குரைகளெல்லாம் ஒக்குமன், சிவபாதவிருதயர் பிள்ளையாரைத் தடாகக்கரையில் இருவித்தாம் நீரிலிழிந்து முழுகியிருந்த அமயத்திற் பிள்ளையார் அவரைக் காணாது அழுதலைக் கண்டு ஆண்டு வந்த கணவனும் மனைவியுமாகிய இருவர் அவர்க்கு இரங்கிப் பாலூட்டிப் போயினாரென்றும், தந்தையார் கரையில் வந்து வெகுண்டு வினாதலை அஞ்சிப் பாலூட்டினார் இவர் என்றுரைப்பிற் பின்னும் வெகுள்வரெனக் கருதித் தமக்குச் சிவபெருமானும் உமையம்மையாரும்அங்ஙனம் பாலூட்டி னாரெனப் பொய்யுரைத்தார் என்றுங் கொள்ளாமோ வெனின்; நன்று கடாயினீர், நல்லது தீயது பகுத்துணர மாட்டாத பிள்ளைப் பருவத்தில் இஃது உரைப்பின் நன்றாம்,மற்று இஃது உரைப்பிற் றீதாம் என்றுணர்ந்து பிறழக் கொண்டு பொய்யுரைத்தா ரென்றால் உலக வியல்பொடு மாறுபடுதலானும், உலக வியற்கையொடு முரணாமைப் பொருட்டுப் பிள்ளையார் நிகழ்த்திய புதுமைகட்கு வேறு விளக்கங் கூறப் புகுந்து வழக்கிடும் நீவிரே அங்ஙனம் உலக வியற்கையொடு முரண்பாடு பெரிதுடையிராய்க் 'கொசுகின் கடிக்கஞ்சிப் புலிவாய்ப் பட்டது’ போற் பெரிதும் இடர்ப்படு வீராதலானும் அவ்வாறு கோடல் ஒரு சிறிதும் பொருத்த முறுவதின்றா மென்பது. அல்லதூஉம் பொதுமக்களாற் பாலுட்டப்பெற்ற பிள்ளையார் அங்ஙனம் ஊட்டப்பெற்ற அந்நேரத்தே பேரறிவும் பேராற்றலும் உடையராய்ப் பிள்ளைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/172&oldid=1591142" இலிருந்து மீள்விக்கப்பட்டது