உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

❖ ❖ மறைமலையம் – 27

பருவத்தில் வரற்பாலதன்றாம்மிகச் சிறந்த திருப்பதிகங் கட்டளை யிட்டருளியவாறு யாங்ஙனம்? எனக் கடாவு வார்க்கு நீர் இறுக்குமாறு சிறிதுமின்றாம். அற்றன்று, பிள்ளை யார் அறிவு கூடாச் சிறுபருவத்தினராதலாற் றமக்குப் பாலூட்டிய பொதுமக்களையே அங்ஙனம் அறியாமையாற் சிவ பெருமானென் றுரைத்திட்டாரெனின்; நன்று சொன்னீர், பால்பருகிய அந்நேரத்தே திருஞான சம்பந்தப்பிள்ளையார் விரிவுணர்ச்சியும் முழுமுதலாற்றாலு முடையராய்த் திகழ்ந்து உலகமெல்லாந் தம் ஆணைவழி நிறுத்தவல்ல தெய்வப் பெற்றியாளரான அப்பெருமானார் பொது மக்களையுஞ் சிவபெருமானையும் வேறுபிரித்து அறிய மாட்டாது மயங்கிக் கூறினாரென்றலும் அறியாமை முதிர்ச்சியா யொழிந்திடு

மென்க.

66

இனி, இவையெல்லாம் ஒருபுறங் கிடக்க, நீவிரெடுத்துக் காட்டிய "தோடுடைய செவியன்” என்னுந் திருப்பதிகத்திலும் மண்ணில் நல்ல வண்ணம்" என்னுந் திருப்பதிகத்திலும் பிள்ளையார் தாங் குழந்தைப் பருவத்தின ரென்பதுபுலப்படக் கூறாமையான் அப்பிள்ளைப் பருவ வலியுடைய ஏதுப்பற்றி நீவிர் நிறுவப் புகுந்த இறை வனதுஅருட்கோலவியல்பு வலிகுன்றி விடுமாலோ வனின் அறியாது அறியாது கூறினீர், பிள்ளையார் அப்பரோடு திருமறைக் காட்டில் எழுந்தருளிய போது மதுரைமாநகரத்திற் சமணருடைய மயக்கவுரையாற் சைவ சமயம் வழீஇச் சமணமதந்த தழீஇய தங்கொழுநரான பாண்டிய அரசனை யுள்ளிட்டுக் குடிமக்களெல்லாரையுந் திரும்பச் சைவராக்குதல் வேண்டி மங்கையர்க்கரசி என்னும் பாண்டி மாதேவியார் பிள்ளையாருக்குத் திருமுகம் விடுத்தார். அதுகண்ட பிள்ளையாருந் தந்திருக் கூட்டத் தோடு மதுரை மாநகர்க்கு எழுந்தருளப் பாண்டியவரசன் அமைச்சராகிய குலச்சிறை என்பார் அவரை எதிர் கொண்டழைத்துச் சென்று பிள்ளையாரைத் திருக்கூட்டத் தோடும் ஒருதிரு மடத்தில் எழுந்தருளி யிருக்கச் செய்தார்.

இதனையறிந்த சமணக் குருக்களெல்லாருந் தெய்வப் பெற்றியுடைய இப்பிள்ளையாரால் நமது சமணம் அழிந்து படும் எனப் பெரிதும் அஞ்சிப் பிள்ளையாரைத் திருக்கூட்டத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/173&oldid=1591143" இலிருந்து மீள்விக்கப்பட்டது