உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

149

தோடுங் கொலை செய்ய எண்ணினார். அந்தோ! அந்தோ! இது து தானோ கொல்லா அறத்தினரான சமணருக்கு அறமாவது! அன்பர்காள்! சிறிது ஆழ்ந்து நினைமின்கள்! ங்ஙனங் கருதிய அக்குருக்கண்மாரெல்லாந் தம்முள் துணிபு ஒருப்பாடு உடையராய்க் கூன்பாண்டிய னிடஞ் சென்று அவனுக்குத் தம்மெண்ணம் புலப்படுத்துக் கரவுரை பலவால் அவனைத் தந்தொழிற்கு இயைவித்துக் கொண்டனர். பின்னர் அன்று இரவு நள்யாமத்திற் பிள்ளையார் திருக்கூட்டத்துடன் பள்ளிகொண்டிருக்கும் அமயங் கண்டு அச்சமணப் படுவர் எரிகொள்ளி கொண்டு மடத்தில் தீக்கொளுவினார். ஐயகோ! மடந் தீப்பற்றி எரியாநிற்க அதனுள்ளிருந்த அடியார் களெல்லாரும் மருண்டெழுந்து ஞான சம்பந்தப் பிள்ளை யாருக்கு இவ்விடரை அறிவித்து அடைக்கலம்புக, இதனை உணர்ந்த பிள்ளையார் சிவடினயார்களுக்குத் தீங்கு இழைக்க முந்துற்றுத் தீக்கொளுவிய சமணப்படுவர் பொருந்தாச் செய்கையைக் குறிப்பானறிந்து இதற்கு வாயிலாயினான் பாண்டிய வரசனேயாமென்பதும்இனிது தெளிந்து,

செய்ய னேதிரு வாலவாய் மேவிய ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப் பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்

பையவே சென்று பாண்டியற் காகவே

என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளி

மடத்திற்

கொளுவிய தீப்பிழம்பு அத்தனையும் பாண்டியன் உடம்பிற் சென்று பற்றுகவென்று ஏவினார். ஏவுதலும் உருவமாகத் தோன்றிய தீப்பிழம்பு முழுதும் அருவ வெப்பு நோயாய்ப் பாண்டியனைப் பற்றிக் கொண்டது.

உடனே பாண்டியன் அந்நோய் பொறுக்கமாட்டா னாய்ச் சமணக் குருமார்களை அழைப்பித்து அவர் தம்மந்திர முறைகளானும் மருந்து முறைகளானும் செய்வித்துக் கொண்டன ஒரு சிறிதும் பயன் றராமைகண்டு மிகவருந்தித் தம்மனையுரிமைக் கிழத்தியாராகிய மங்கையர்க்கரசியாரைத் தன்மாட்டு வருவித்து அவர்க்கு இதனைத் தெரிவித்தான். அரசியாரும் உடன் வருந்தித் தங்குறிப்பு நிறைவேறுங்காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/174&oldid=1591144" இலிருந்து மீள்விக்கப்பட்டது