உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

❖ ❖ மறைமலையம் - 27

இதுவென்று எண்ணித் தங்கொழுநனை நோக்கிப் “பிள்ளைப் பருவத்தே உமை திருமுலைப் பாலுண்டு ஞானசம்பந்த வள்ளலாய்த் தந்திருக் கூட்டத்தோடு இந்நகரத்தில் எழுந்தருளி யிருக்கும் பெருமான் இங்கு எழுந்தருளினால் அன்றி இந்நோய் தீராது” என்றுரைப்ப, அதனைக் கேட்ட அரசனும் அதற்கு உடன்பட்டுத்தம் அமைச்சரான குலச்சிறையாரைப் பிள்ளை யாரிடம் போக்கினான். அமைச்சரும் நிகழ்ந்த வெல்லாம் பிள்ளையார் திருமுன்பிற் றெரிவித்து அவர் பாண்டிய னிடத்திற்கு எழுந்தருளச் செய்தார். பிள்ளையார் அருமைத் திருவுருவைக் காண்டலும் பாண்டியன் ஆறுதல் பெரிதுடைய னாயினான். இவ்வாறு ஞானசம்பந்தப் பெருமானார் பாண்டிய னருகில் மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் பக்கத்தே எழுந்தருளி யிருக்கும் அளவில் ஆண்டுக் குழுமியிருந்த சமணக்குருமார் பிள்ளையாரைச் சுட்டிப் பலவாறு இகழ்ந்து சொல்லிக் குரைத்திட்டார். பக்கத்தேயிருந்து அதனைக் கண்டு பொறாராகிய மங்கை யர்க்கரசியார் தங்கணவனை நோக்கிக் பெருமானை இவர்இவ்வாறு இகழ்வதோ?" என்று வருந்திக் கூற அப்போது ஞானசம்பந்தப் பெருமானார் அரசி யாரைப் பார்த்து,

66

குழந்தையாயிருக்கும்

மானினேர்விழி மாதராய்வழு திக்குமாபெருந் தேவிகேள் பானல்வாயொரு பாலனீங்கிவ னென்றுநீ பரிவெய்திடேல் ஆனைமாமலை யாதியாய விடங்களிற்பல வல்லல்சேர் ஈனர்கட்கெளி யேன லேன் றிருவாலவாயர னிற்கவே என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளினார். இதன் கண் (6 ஞானசம்பந்தப் பிள்ளையார் மங்கையர்க் கரசியாரை நோக்கிப் “பால் மணக்கும் நல்வாயையுடைய பாலன் நானென்று அம்மே! நீ வருந்தாதே” என்று உரைத்தருளினா ரென்பது பெறப் படுதலால், அவர் பாண்டி நாட்டிற்குச் சென்று சமணரொடு வழக்கிட்ட காலத்திலேயே பாலறாவா யராக இருந்தாரெனல் தெற்றென விளங்கும். இங்ஙனம் பிள்ளையார் மதுரைமா நகரிலிருந்த காலத்தே அவர்க்கு நான்கு அல்லது நாலரை ஆண்டுதான் சென்றதென்பதற்கு அவர் தம்மைப் பால்மணக்கும் நல்வாயர் எனக் கூறுதலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/175&oldid=1591145" இலிருந்து மீள்விக்கப்பட்டது