உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

151

சான்றாம். இனிப், பெரிய புராணத்தின்கண் ஓதப்பட்ட மெய்வரலாறு ஒருசிறிது ஆராய்ந்து சல்வார்க்கும், மதுரைமாநகர்க் கு ச் செல்லு முன்னரே பிள்ளையார் தெய்வப் பெற்றியுடையராய்ச் சிவபிரான் திருக்கோயில் கடோறுஞ் சென்று திருப்பதிகங் கட்டளையிட் டருளிச் செய்து காலம் ஒன்று அல்லது ஒன்றரையாண்டுகளாகலா மென்பது விளங்கும், ஆகவே பிள்ளையார் சிவபெருமான் றாங்கிவந்த அருட்கோலத்தை நேரே கண்டு அக்கோலத்தால் அருள் செய்யப்பட்ட காலம் அவர்தமக்கு மூன்றாண்டு செல்கின்ற பருவத்திலேயா மென்று பெரியபுராணங் கூறிய உண்மை வரலாறு மேன்மேல் உரங்கொண்டு திகழுமாறு

காண்க.

இங்ஙனம் அளவை நூற்பொருளொடு படுத்து யாம் இனி தெடுத்துவிளக்கி வரலாற்றின் முடிபொருளாய்ப் பிள்ளையார் தாம் மூன்றாண்டு செல்கின்ற அக்காலத்திலே தான் இறைவனும் இறைவியும் ஒருங் கெழுந்துவந்த அருட்டிருக் கோலத்தை நேரே கண்டு பின் அதனால் அருள் செய்யப் பட்டாரென்பது நன்று பெறப்பட்டதாகலின், அதுபற்றி யாம்நிறுவப்புகுந்த வருட்கோல வியல்பு வலியிழந்ததாய் விடுமென்று நீர் கூறியது போலியுரையேயா மென்று துணிக.

இன்னுந் 'தோடுடையசெவியன்’ எனக் கண்ணினாற் காணப்படும் உருவமும், 'பால்கறந்தூட்டுக பால்கறந்தூட்டுக' என்னுஞ் செவியினாற் கேட்கப்படும் ஓசையும் மூக்கினாற் கவரப்படும் இனிய பான்மணமும், வாயினாற் சுவைக்கப் படும் பாலும், அம்மையப்பரால் தொடப்பட்ட ஊற்றுணர்வு நிகழ்ச்சிக் குரிய உடம்பும் உடைய அவ்வருட் கோலம் உண்மைப் பேறுடையதா மென்று நன்குணர்ந்து கொள்க. இங்ஙனம் உலக வழக்குணர்வும் அதனாற் பாவனை செய்யும் ஆற்றலும் வாய்ப்பப் பெறாத குழந்தைப் பருவத்திலே ஞானசம்பந்தப் பிள்ளையார் மதிமுகிழ் பிணித்த மாதியல் பாகனை நேரே கண்டு அருள் செய்யப்பட்டுத் திருப்பதிகங் கட்டளையிட் டருளிய வியத்தகு நிகழ்ச்சியை வரலாற்றியல் பிறழாது உண்மையான் ஆழ்ந்தாராயவல்ல எந்தநிரீசுரவாதி தாம் பொய்யென்று மறுக்க முந்திடுவார்? மக்களுக்கு அமைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/176&oldid=1591146" இலிருந்து மீள்விக்கப்பட்டது