உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் – 27 •

மூளையின் ஆற்றலால் மிக வியப்பான நிகழ்ச்சிகளும் எளிதில் நிகழும் என்று தமக்குத் தோன்றிய வாறெல்லாம் வானக் கோட்டை கட்டி அதன்கண் நின்று பிறரை அறைகூவி யாரவாரஞ் செய்யும் மனநூலார் தாம்இவற்றுக்கெல்லாம் யாது சொல்லவல்லார்? உண்மை வரலாற்று முறையொடு மாறுகோளுறாது நிகழ்ந்த இவ்வியத்தகு நிகழ்ச்சியை அற்புதமே ஒன்றில்லையெனக் கூறும் பிரமசமாசத்தார் தாம் எவ்வாறு கடந்து பேச வல்லார்? இதுநிற்க.

இனிப் பிரமசமாசத்தார் உலகவியற்கைக்கு வேறாக அற்புதமென ஒன்று நிகழுமாறில்லையெனக் கிளந்துரை யாடி ஆரவாரஞ் செய்தலின் அவருரைப் பெற்றியையும் ஒருசிறிது ஆராய்ந்து அது போலியாமாறு காட்டிப் பின்னர் எடுத்துக் கொண்ட பொருண்மேற் செல்வாம்.

பிரமசமாசத்தார் கூறுமாறு: வித்தினின்று முளை கிளம்பி பின் பல ஆண்டுகள் சென்று மரமாதலும், ஒருதாய்க் கருப்பையிற் கருமுதிர்ந்துபத்துத் திங்கள் கழியப் பிறந்து வளர்தலும், வளர்ந்தன ஒரு காலத்து இறந்தொழிதலும், நிலன், நீர், நெருப்பு, காற்று, வான் முதலிய வுலகியற் பொருள்கள் தத்தம்நிலையிற் பிறழாது நின்று இயங்குதலும் பிறவுமாகிய தொழிற்பாடுகளெல்லாம் இயல்பாக வருவன வாம்; இவற்றை இங்ஙனம் வகுத்தமைத்து நெறி பிறழாது நடாத்துகின்ற வனாகிய முழு முதற் கடவுள் அவற்றினியல் பைப் பிறிதொரு காலத்து மறுத்து மாற்றினானென்றல் அவனுடைய இறைமைத் தன்மைக்குப் பொருந் தாமையான், அற்புதங்கள் என்பன உலகவியல்பொடு மாறுபாடு பெரிதுற்று நிகழ்வன வாமென்று ஒரு சார் சமயவாதிகள் கூறுவது பொய்யேயாம் என்பர். இதனை ஆராய்வாம்.

இனி, வரலாற்றுண்மை யுணர்ச்சி மிகவுடையார்க்கு இங்ஙனம் நடந்த வியத்தகு நிகழ்ச்சிகளைப் பொய்யென்று மறுத்தலாகாமையான், இ வை தமக்கு வேறு வழி சொல்லாமல் வாளா தமக்குத் தோன்றியவாறே பொய் யென்றுரைத்தல் முறையாகாது. அல்லதூஉம், இவ்வற்புதங் கடாம் ஒரு காலத்து ஒருதேயத்தில் நிகழ்ந்தனவாகாமல், எக்காலத்தும் எல்லாத்தேயத்தின்கண்ணும் நிகழா நிற்கின் றன, ஏசுநாதர் ஒருசில அப்பங்களையும் மீன் களையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/177&oldid=1591147" இலிருந்து மீள்விக்கப்பட்டது