உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

153

பெருந்திரளான மக்கட்கு விருந்தளித்தாரெனவும் அத்தி மரத்தை வற்றச் செய்தாரெனவும், இறந்தவனை எழுப்பி னாரெனவும், ஏனைச் சமய நுல்களிலுங் கூறப்படுதல் காண்கின்றோம். இந்நாவலந் தீவில் உண்மை மேலறிவு முதிர்ச்சி கைவந்தவராகிய தூய சான்றோர்கள் தோன்றிப் பல வேறு அற்புதங்கள் நிகழ்த்திய வாறு போலவே ஏனை நாடுகளிலும் உண்மைக் கீழறிவுப் பேறுடையரான தீர்க்கதரிசிமார் தோன்றிப் பலவேறு அற்புதங்கள் நிகழ்த்தக் காண்டலால் இவையனைத்திற்கும் ஒரு வழி சொல்ல அறியாமல் மற்று அவையெல்லாம் வெறும் பொய்யாமென் றுரைப்பார் கூற்று வெறுங்கூற்றாவ தன்றிப் பிறிதென்னை?

எம்மறிவுக்குப் பொருந்தவில்லை என்றும் எம்மனு பவத்திற்கு அஃது இயையவில்லை யென்றும் உரைத்து அத்தனை எளிதாக அவற்றைப் பொய்யென் றுரைப்பார் வேறு என்கடவரென்க! இக்காலத்தில் நீராவிப் பொறிகளின் உதவியாலும், மின்வலிப் பொறிகளின் உதவியாலும் வியப்பான பல பொருள்களும், பல தொழிற் கூறுபாடுகளும் செய்யப் படுதல் காண்கின்றாம்.இவையெல்லாம் ஓர் ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னிருந்த எம் முது மக்கள் கனவினுங் கண்டறியார். அவர் காலத்தில் ஒருவர் தோன்றிப் பின்னொரு காலத்தில் நீராவிப் பொறிகளும்மின்வலிப் பொறிகளு ஏற்பட்டு அருமையான பலவுஞ் செய்யு மென்று உரைத்தக் கால் அதனைக் கேட்ட ஒருசிலர் அது பெரும்புதுமையா யிருக்கு மெனவும், வேறு சிலர் அஃது உலக வியற்கைக்கு மாறாகலின் அவ்வாறு நிகழாது எனவும், வேறு சிலர் எந்தவினையுஞ் செய்கின்றவன் ஆற்றல் பற்றி நிகழ்வதாகலின் பின்னர்ப் பிறக்கும் அறிவு நுட்பவாற்றல் மிக்குடையரான மக்கள் அது செய்தற்கு முரியராவரெனவும் உரைத்துத் தத்தங் கருத்து மொழிந்திடுவார். இனி, அப்பொறிகளின் பயனை நேரே கைக்கொண்டு போதரும் எமக்கெல்லாம் அங்ஙனம் வியப்புணர்வு நிகழ்த லின்றாகலின் அவ்வமைப்புகளெல்லாம் எளியனவாகவே எமக்குக் காணப்படுகின்றன.

இவ்வாறே, செம்பைப் பொன்னாக்கும் ரசவாதம் பொய்யாமென்று சொல்லிக் கொண்டிருந்த இயற்கைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/178&oldid=1591148" இலிருந்து மீள்விக்கப்பட்டது