உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மறைமலையம் 27

― -

பொருணூலாரும் இப்போது அமெரிக்கா தேயத்தில் ஒருவர் செம்பைப் பொன்னாகத் திரித்து விற்றலைக் கண்டு அதனையும் உண்மையாமென நம்புதற்குத் தலைப்பட்டு விட்டார்கள். மந்திரவொலிகட்கு வடிவமுண்டென்று சைவ சித்தாந்திகள் சொல்வதை மறுத்தார் சிலர், அமெரிக்காவில் ஓரரிய கலைநூல் அறிஞர் ஒலி நுட்பங்கட்கெல்லாம் வடிவுண் டென்பதைக் கண்கூடாகச் செய்து காட்டுதலை யறிந்து அதனையும் நம்பத் தலைப்பட்டுவிட்டார்கள் மின்னோட்டக் கம்பியின்றி மின் செய்தி இயங்கமாட்டா தென்று சொல்லிக் கொண்டிருந்த ஐரோப்பியக் கலைஞர் எல்லாரும், நுண் ணறிவுக் கலைஞர் ஒருவர் புதுவதாகக் கண்டு பிடித்த முறையால் கம்பியின்றியும் மின்னியக்கம் நடை பெறுமென்று கூறி அதனையுந் தழுவிக் கொண்டார்கள். இவ்வாறே க்காலத்தில் அறிவு நுட்பத்தாற் பேராற்றலுடை யரான நன்மக்கள் பலர் தோன்ற முற்காலத்திற் கனவு காண்டற்கும் அரியவாய்க் கிடந்த அரும்பெருந் தொழில் களை யற்றுகின்றார். இங்ஙனம் ங்ஙனம் இவர் கண்கூடாகச் செய்து காட்டுஞ் செயற்கரிய செயல்களை யெல்லாம் நேரே கண்டு வைத்துந், தம்முடைய அறிவுக்கும் அனுபவத்திற்கும் எட்ட வில்லையென்று லயென்று அவற்றை யெல்லாம் பொய்யென்றல் பேதை நீரார் செயலேயா மென்று ஒழிக

இனிப், பெரியோர் நிகழ்த்திய புதுமைகள் உலக வியற்கைக்கு மாறுபாடுறுதல் இல்லை யென்பதூஉம் ஒரு சிறிதுகாட்டுவாம். ஞானசம்பந்தப்பிள்ளையார் திருமயிலாப் பூருக்கு எழுந்தருளின காலத்திற், சிவநேயர் என்பார் ஒருவர் வளர்த்த அரியபெண் பாம்பு கடித்திறக்க, அப்பெண்ணின் தந்தையாரான அவர் அவளுடம்பைத் தீயிலிட்டுக் கொளுத்தி என்புகளை யெல்லாம் ஒரு குடத்திற் பெய்து பொதிந்து பிள்ளையார் திருமுன்பே கொண்டுவந்து அவர்க்கு அடியுறை யாக இட்டு, 'அருமையாக வளர்க்கப் பட்டபூம்பாவை என்னும் என் மகள் இறந்தாளாயினும் பெருமானுக்கே அடியுறையாகச் செலுத்திவிடல் வண்டு மென்னுங்

கடப்பாட்டால் அவள் என்பைத்திருவடிக்கு உறையாக உய்த்தேன்' என்று நெஞ்சங்கரைய மொழிதலும் பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/179&oldid=1591149" இலிருந்து மீள்விக்கப்பட்டது