உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

155

யாரும் அவ்வன்பர்க்கு மிக இரங்கி இறைவன் திருக்கோயி லுட்புகுந்து அக்குடத்தையுந் திருமுன்பே இருத்தி,

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தா னொட்டிட்ட பண்பி னுருத்திரப் பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

என்னுந் திருப்பதிகங் கட்டளையிட்டருளினார். அருளலும், என்பாய்க் கிடந்த அப்பிண்டம் எழுவகை முதலுங்கூடித் திரண்டுருண்டு அழகிய பெண் வடிவாய்க் குடத்தினின்றும் எழுந்தது.இப்புதுமை உலக வியற்கையோடுஇணங்குமாறு காட்டுவாம்.அப்பெண்ணின் உடம்பு அழிந்தது என்பதனாற்

பறப்பட் உண்மையாது? என ஒருங்கி ஆராயலுறுவார்க்கு எழுவகைப் பொருள்களாற் கட்டப்பட்டு பருவடிவிற் காணப்பட்ட உடம்பு நுண் அணுக்களாய்ப் பிரிந்து கட்புல னாகாது நுண் வடிவிற்றாய் ஒழிந்தது என்பதேயா மென்றோ? இங்ஙனம் அதனை நுண் அணுக்களாகப் பிரித் தற்கு வினை முதலான ஒருவனுடைய தொழில் இன்றியமை யாததா மன்றோ? அங்ஙனமே, எழுவகைப் பொருள் களையும் ஒருங்கு கூட்டுதற்கும் வினைமுதலாக ஒருவன் வேண்டப்படு மன்றோ?

அவ்வினை முதல்தான் எல்லாம்வல்ல முழுமுதற் பெருங்கடவுள் ஒருவனேயாம், எவ்வாறு வனைதற்றொழிற்கு முதலான குயவன் தன் ஆற்றற்கேற்பச் சிறிது சிறிதாக மண்ணைக் கூட்டிக் குடந்திரட்டுகின்றானோ அவ்வாறே எல்லாம்வல்ல முதல்வன் தன்பேராற்றற்கேற்ப அளவிறத்ந உலகங்களையும் அவ்வுலகங்களிற் பலவேறு வகைப்பட்ட உடம்புகளையும் படைத்திட்டு உயிர்களுக்கு இன்பம் நுகர்விக்கின்றான். இங்ஙனஞ் செய்கின்ற இறைவன் எல்லாந் தனக்குரிய முழுமுதலறிவாற்றல் பற்றியே செய்வதல்லது, எம்மைப் போலப் பிறர்வழியனாய் நின்று செய்வானல்லன். அவனுடைய அருளுக்கும் ஆற்றலுக்கும் ஓர் அளவே யில்லை. அவ்வயில்பினனாகிய இறைவன் றிருவருள் பதியப்பெற்ற 6 ஞானசம்பந்தப்பிள்ளையார், பூம்பாவை என்னும் பெண் மகளின் உடம்பு நுண் அணுக்களாப் பிரிந்தழிய அங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/180&oldid=1591150" இலிருந்து மீள்விக்கப்பட்டது