உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

❖ - ❖ மறைமலையம் - 27

அழிந்தவதனைத் திரும்பவும் முன்னைப் பருவுடம்பாம்படி றைவன் றிருவருள் வலி கொண்டு செய்திட்டார். அற்றேல் ஒரு தாய் அகட்டிற் கருவைப் புகுத்தி அதனைச்சில காலத்திற் புறம்படுத்தி வளர்த்து அழிக்கின்ற இறைவன் றிருவருட் செயல் அச் செயன் முறைதிறம்பி, இடையொரு காலத்து அழிந்ததோர் உருவைப் பெயர்த்தும்வேறு ஒருபுது முறையாற் படைத் திடுதல் பொருந்துமோ வெனின்; அற்றன்று, அழியும் பருவ மன்றாகிய காலத்தே அழிந்து பட்ட அவ்விளம் பெண்ணைப் பெயர்த்துந் தந்தது அருள் செய்ததாகலின் அஃது இழுக்கன்றாம். அல்லதூஉம், தனக்கென அறிவாற் றலுடைய னாகிய முதல்வன் தன்றிரு வடித்தொண்டு பேணும் அன்பர்க் கிரங்கி அவர் வேண்டியவாறே செய்திட்டா னாகலானும், மலவழியராய்க் கிடந்துழலும் எம் பொருட் டாகவே சட்ட திட்டங்களியற்றிய தன்றித்தன்னியல்பில் அறிவுருவாய் விளங்கும் பெருமானுக்குச் சட்ட திட்டங்கள் பிறர் வகுத்துவைத்தல் பொருந்தாதாய் முடியுமாதலானும், சட்டதிட்டங்கட்கு உட்படுவாரெல்லாம் பிறர்வழியராதல் றைவனுக்கும்அவை யுண்டெனக்

காணக் கிடத்தலால்

கூறுதல் அவன் முதன்மைக்கு இழுக்காமாதலானும்

அவ்வாறு கடாதல் இறைவனொருவனுண்டெனக் கொண்டு வழுத்தும்பிரம சமாசத்தார்க்கு ஒருசிறிதும்இணங்காதென் றொழிக.

66

இதுபற்றியன்றே விதியும்விலக்குங் கடந்தார்க் கு விதியாலொன்றை விதிப்பாரார்” என்னுந் திருமொழியும் எழுந்ததென்றுணர்க. ன்னும், இயற்பொருட் கலைஞன்" ஒருவன் தனக்கிருக்கும் ஆற்றல் பற்றித் தன்மாட்டுள்ள கருவி கொண்டு தண்ணீரை இருவேறு நுண்வளிகளாகப் பிரித்தலும், அங்ஙனம் பிரித்த அவற்றைப் பெயர்த்துந் தான் விரும்பிய வாறே பருவடிவத் தண்ணீராகச் செய்தலுங் காண்கின்றேம். அவ்வாறே இறைவனும் நுண் அணுக்களாகப் பிரித்த அவ்விளம் பெண்ணின் உடம்பைப் பெயர்த்தும் பருவடிவில் முன்னை

யுடம்பாகத்தன்

முழுமுதலாற்றலாற் செய்திட்டானாகலின் அஃதுலகவியற்கை யொடு முரணிற்று என்றல் யாங்ஙனம்? அவ்வவர் செய்யுந் தொழிற் கூறுபாடுக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/181&oldid=1591151" இலிருந்து மீள்விக்கப்பட்டது