உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

157

ளெல்லாம் அவ்வவர் ஆற்றன் மிகுதி பற்றியே சிறப்பனவாம். இயற்பொருட் கலைஞன் தன்னாற்ற லுட்பட்ட தொன்றை அவ்வாறு செய்தானாயின், எல்லாம் வல்ல தன்னாற்றலுக் கேற்ப இறைவன் தானும் அவ்விளம் பெண்ணை அங்ஙனம் எழுப்பினான்.

பிறந்தோ ரிறத்தலு மிறந்தோர் பிறத்தலும் அறந்தரு சால்பு மறந்தரு துன்பமும்

(மணிமேகலை)

என்றவாறு போலப் பிறத்தலும் இறத்தலுமியற்கையாவாரா நின்ற இவ்வுலகத்தே, அவ்விளம் பெண்ணை இறக்கச் செய்தும் பின் குடத்தினின்று பிறக்கச் செய்துந் திருவிளை யாடலியற்றிய முதல்வன் உலகவியற்கையொடு முரணிச் செய்தானென்றல் மையாது.

அற்றேல் அஃதாக, யாம் உலகவியற்கையொடு முரண் பாடுடைய தென்றது அவ்விளம் பெண்ணை ஒரு தாய்வயிற்றி னின்று பிறப்பியாமல், இடையொரு காலத்துக் குடத்தி னின்றும் எழுப்பியதையேயாமாகலின் அதனை யுணராமல் நீர்மேலே யுரைத்த வழக்குப் புரை படுமாம் பிறவெனின்; நன்று சொன்னாய், அதனை யுணராதேம் அல்லேம், அங்ஙனம் உலகவியற்கையொடு பொருந்தச் செய்தல் வேண்டினானாயின் முதல்வன் அவ்விளம் பெண்ணைத் தாய்க் கருப்பையில் நுழைப்பிக்கக் கடவனென நீ கூறியது ஒக்கும்;

இறைவன் அவ்விளம் பெண்ணை வேறு ஓர் உ

ம்பின்

கண் உய்த்தல் வேண்டினானாயின் அவ்வாறே செய்கிற்பன். அங்ஙனமின்றிச் சிவ நேயரென்னும் அன்பர்க்கு மகளாய்ப் பிறந்த அந்த யாக்கையின் கண்ணேயே அவ்வுயிரை அவர் வேண்டுகோட்கு இரங்கிப் புகுத்தல் வேண்டினமையின், அவ்வாறு இடையொரு காலத்து நுண் வடிவாய்ப் போன அவள் யாக்கையைத் திரும்பவும் பருவடிவிற்றாக்கி அருள் செய்தானென்றுணர்க. அவ்வாறு திரும்ப அருள் செயல் வேண்டினானாயினும், சிவநேயர் மனைவியின் கருப்பையிற் புகுத்தி அவ்வாற்றால் அவளைப் பிறப்பித்தலே முதல்வனுக்கு முறையாமாலெனின்; அதனால் அவ்விளம்பெண் மறுபடியுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/182&oldid=1591152" இலிருந்து மீள்விக்கப்பட்டது