உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

159

வழக்குரைகளும் வாய்ப்புடையன வேயா மென்பதூஉம் எளிதிலுமக்கு விளங்கும். இன்னும் உலகவியற்கை யென்பது இறைவன் உயிர்களின் அறிவு முதிர்ச்சிக் கேற்பத் தன் உரிமை அறிவாற்றலால் நிகழ்த்துஞ் செய்கையின் அமைப்பே யாமென யாங்கூறும் லக்கணத்தை நீர் ஒருசிறிது உளங்கொளப் பொருத்தி யாராயவல்லிராயின் 'பெரும் பான்மை' யென அடைகொடுத்து இடர்ப்பட்டு நீர் இலக்கணங் கூறுதலும் வேண்டா, அல்லது அவ்வடை காடுத்து இலக்கணஞ் சொல்லுவீராயினும் அதுவுமெம் க்கிற்கு ஒத்து நிற்பதேயன்றி மாறுபாடுறாது. எனவே, ானசம்பந்தப்பிள்ளையார் மூன்றாம் ஆண் ஆண்டிலேயே பேரறிவினராய் உலகை உய்வித்தது உலக வியற்கையொடு பொருந்துவதே யாமென்றுணர்ந்து கொள்க.

வழ

உலக

இனி, நிரீசுரவாதிகளுள் ஒரு சாரார் ஞான சம்பந்தப் பிள்ளையாரே தாம் நிகழ்த்திய அற்புதங்களைக் குறிப் பிட்டுப் பதிகங்கள் கட்டளையிட்டருளினா ரென்பதற்குச் சான் று என்னையென்று வினாவுவராலெனின்; வழக்கும் ஆன்றோர் வழக்குமே அதற்கு உறுசான்றாம். பிள்ளை யாரோடு ஒருங்கிருந்த திருநாவுக்கரசுகளும், அவர்க்குச் சிலகாலம் பின்னிருந்த சுந்தரமூர்த்திகளும் அவர்க்கு சிலகாலம் பின்னிருந்த நம்பியாண்டார் நம்பி களும், அவர்க்கு சிலகாலம் பின்னிருந்த பெரியபுராண முடைய சேக்கிழாரும் பிள்ளையார் அருமை பெருமை களை மிக விரித்துரைக்கும் வழக்கானும் மரபானும் முன் னெடுத்துக் காட்டிய பதிகங்களும்பிறவும் பிள்ளையார் கட்டளை யிட்டருளி யனவேயாமென்க. அற்றேலஃதாக, அவ்வான்றோர் உரையைத் தான் மெய்யெனக் கொள்ளு தற்குச் சான்று என்னையெனின்; நன்று வினாயினாய். இத்தனை ஐயுற வுடையையாய்த் தெளியமாட்டாது தடை நிகழ்த்துமுனக்கு எத்தனைதான் யாம் உரைப்பினு ம் மேன்மேலும்தடை நிகழ்த்தி வரம் பிறந்தோடுங் குற்றத்திற்கு ஞ்செய்வை யாகலான் அவ்வாறெல்லாம் உனக்கு யுரையேம். ஆயினும் நினக்கு மெய்யறிவு கொளுத்து தற் பொருட்டு நின்மாட்டுயாமே சில வினாக்கள் நிகழ்த்து கின்றாம்; உய்த்துணர்ந்து கேட்பையாக

டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/184&oldid=1591154" இலிருந்து மீள்விக்கப்பட்டது