உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

❖ ❖ மறைமலையம் – 27

நீ குழந்தையாயிருந்த பருவத்திலே நின்தாய் இன்ன என்று யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளுரைப்பவன்றோ உணர்ந்தாய். அவள் பாலுண்ணுக என்று சொல்லி நின்னை ஊட்டிய காலத்தினெல்லாம் நீ உணவு கொள்ளும் இப் பொருளை யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளுரைப்பவே யன்றோ உணர்ந்தாய். இவ்வாறே உலகியற் பொருள்கட் கெல்லாம் பெயரிடுமாறும், அவற்றைத் தெரிந்து பயன் படுத்துமாறு மெல்லாம் யாங்ஙனம் உணர்ந்தாய்? அவளு ரைப்பவேயன்றோ உணர்ந்தாய், அக்காலங்களி லெல்லாம் நின் அன்னை சொல்லியவற்றை அவள் சொல்லிய வாறே நீ நம்பினதன்றி அவள் சொன்ன வ்வொன்றனையும் ஆராய்ச்சி செய்து பின் நீ நம்பியதுண்டோ? இல்லையே, இப்போது தான் என்ன! நீ கலை பயில் கழகஞ் சென்று கல்வி பயிலுங் காலங்களினெல்லாம், ஆசிரியர் சொல்லியவற்றை ஒருங்கே நம்பி, அந் நம்பிக்கையின்மேல் உன்னறிவெனுந் திண்ணிய அரணைக் கட்டுதலன்றி, அவர் கற்பிக்கும் ஒவ் வான்றிலும்நீ ஐயங்கொண்டு தெளிந்ததுண்டோ? ஆசிரியன் ஒரு பொருளுக்கு நீர் என்றும், ஒன்றுக்கு நில மென்றும், ஒன்றுக்குத் தீ என்றும், பலவாறாகப் பெயரிட்டுக் காட்டினால் அவற்றுக்கு ஏன் அப்பெயர் அமைத்தார் என்று நீ ஆராய்ந்ததுண்டோ? அல்லது அவர் சொல்வது பொருத்தந்தானாவென்று நீ ஐயம்நிகழப் பெற்றதுண்டோ? இவையெல்லாம் ஒரு புறங்கிடக்க. நீ நாடோறும் நண்பர் களோடு கலந்து பழகுங்காலும் அவ்வவர் உரைக்குஞ் சாற்களையும் பொருள்களையும் பொருந்த ஆராய்ச்சி செய்துதான் நம்புகின்றனையோ? ஒருவர் அமெரிக்கா தேயம் என்று இருக்கின்றது என்றுரைத்தால், அப்படி ஒரு தேயத்தை இ நான் கண்டதில்லாமையால் அது பொய்யென் பையோ?

நீ

ஒருகாலும் உரையாய். இருந்தவாற்றால், உன்னறிவு முதிர்ச்சியும் ஆராய்ச்சித்திறனுந் தொழிலொருமைப்பாடும் பிறவுமெல்லாம் பிறர் சொல்லின்கண் உனக்கு இயல்பாக வழுந்த நம்பகம்பற்றியே மெய்யாய் நிகழ்வதல்லது வேறு இன்றாம்.இனி, அங்ஙனம் உனக்கு நிகழ்வதாகிய நம்பக வுணர்ச்சியும் உனக்கு அதனை வருவிக்கின்றவர் மெய்யுரை யியல்பு பற்றியே உரம் பெற்றுத் தோன்றும். அவர் சேய் நாட்டின்கண் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றைத்தாம் நேரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/185&oldid=1591155" இலிருந்து மீள்விக்கப்பட்டது