உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

161

கண்டிருந்ததாக உரைத்திடுவராயின் அதன்கண் நம்பிக்கை மிக உறுதியாக நினக்குத் தோன்றா நிற்கும்; அவர் அதனைத் தாமே நேரிற் காணாமற் கண்டார் ஒருவர் தமக்குரைப்பத் தாங் கேட்டவாறே அதனை நினக்கு மொழிந்திடுவராயின் அதன்கண் நம்பகஞ் சிறிது குன்றித் தோன்றா நிற்கும். இவ்வாறே ஒருவர் ஒருவர்க்கு உரைப்ப வருகின்றன வெல்லாம் முறை முறையே நம்பகங் குறையத் தோன்றா நிற்கும். இனி ஒரு நிகழ்ச்சியைக் கேட்டோர் உரைத்தவாறே அதனைக் கண்டிருந்தோரும் பொருந்த வுரைத்திடுவராயின், அது மெய்ம்மை மிகவுடைத்தாய் உலகத்தின்கட் பரந்த ம வழக்கமுற்று ஆன்றோராற் பாதுகாக்கப் படும் மெய் வழக்காய் நிலையுதலுறும். இங்ஙனம் பரந்துபட்ட வழக்காய் வரும் மெய்ந் நிகழ்ச்சிகளையே குறிப்பிட்டு ஆங்கில நூலாரும் நாட்டு வரலாறுக ளெழுதுகின்றனர். அவரெழுது கின்ற அவ்வரலாற்று நூல்களின் கண்ணெல்லாம் எந்த நிரீசுர வாதியும் ஐயுறவுகொள்ள இடம்பெறார். சீசர் என்னும் ஓர் அரசர் ஆயிரத்தெழுநூறு ஆண்டுகளின் முன் உரோம நகரத்திற் செங்கோலோச்சினாரென்பது அவர் செதுக்கிய சில கல்வெட்டுக்களால் இனிதுணரப்படு மென்றால் அதன் கண் ஐயுறுவார் யாருமிலர். இதுபற்றி யன்றே அளவை நூலாரும் உரையளவையென வொன்று சிறந்தெடுத்துக் கொள்வாராயினர். இது நிற்க.

L

இனி, ங்ஙனங் காட்டிய வரலாற்று முறைக்கு

ணங்கவே, எம் 6 ஞானசம்பந்தப்பெருமானார்

தாம்

நிகழ்த்திய அரும்பேரற்புதங்களைத் தம் அருமைத்திருப்பதி கங்களிற் கட்டளையிட்ட ருளுதலும், பிள்ளையாரோ டாருங்கிருந்து அவ்வற்புதங்களை நேரே கண்டிருந்த தோலாநாவின் மேலோராகிய அப்பருந் தம் அன்புருவான பதிகங்களிலவற்றைக் கட்டளையிட்டருளுதலும், இங்ஙனம் மெய்ம்மைகொண்டு நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சிகள் சுந்தர மூர்த்திகள், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார் நாயனார், உமாபதி சிவனார், தாயுமானவர் முதலிய மெய்த்திருவாளரான சான்றோரான் மொழியப் படுதலும், அங்ஙனம்மொழியப்படுதலாற் பரந்துபட்ட உலகியல் வழக்கும் ஆன்றோர் அறநெறி வழக்குமாய்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/186&oldid=1591156" இலிருந்து மீள்விக்கப்பட்டது