உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

❖ ❖ மறைமலையம் – 27

பாதுகாக்கப்படுதலுந் தேர்ந்துணர வல்லை யாயின் மேன்மேல் வரம்பிறந்தோடுந் தடை நிகழ்த்திமலை வாயல்லை. இனி, ங்ஙனங் காட்டிய உரையளவைகளையுங் கடந்து அழிவழக்கு பேசத்துணிதல் உலகத்தாராற் பித்த னென்று எள்ளப்படுதற் கேதுவாமாகலின்,இனி யாமெடுத்துக் காண்ட திருவுருவ வழிபாட்டினியல் வழாது மேலும் அதனை ஆராய்ந்து செல்வாம்.

இதுகாறும்

யாம் எடுத்து விளக்கியதன் முடி பொருளாய்ப் பெறப்படுவன யாவையோ வெனின், நாவலந் தீவினராகிய நம்மனோர் செய்து போதருந் திருவுருவ வழிபாடு இறைவன் ஒரோவொரு காலத்து ஒரோரன்பர்க்கு அருள்புரிதற் பொருட்டு அருளையே திருமேனியாக் கொண்டு எழுந்தருளி வந்த திருக்கோலக்குறிப்பு இனிது விளங்க அமைத்து நிறுத்திய வழிபாடாய், அவ்வழிபாடு வாயிலாகவே எமதுணர்வை இழுத்துச் சென்று இறைவன் மாட்டுப் பதியவைக்குங் கருவியாமென்பதூஉம் இங்ஙனம் போந்த அருட்கோலத்தை அறிதற்குரிய நல்வினை முகிழ்ப்பு ல்லாத ஏனை நாட்ட ஏனை நாட்டவர் தத்தமக் கறிவு சென்றவா ரல்லாங் கல்லானுஞ் செம்பானும் இயற்றி வைத்துக் கொண்டு வழிபடும் அவரது வழிபாடு அவ்விக்கிரகங் கண்மேற் கடந்து சென்று இறைவன் உண்மையருட் கோலத்தின்கண் அவரறிவைப் பதிக்க மாட்டாமையின்அவர் செய்யும் அவ்வழிபாடு விக்கிர காராதனை யென்று வழங்கப்பட்டதா மென்பதூஉம், இங்ஙனம் வேறுபாடு பெரிதுடைய திருவுருவ வழிபாட்டிற்கும் விக்கிரகாராத னைக்கும் இலக்கண முணராது அவை யிரண்டனையும் ஒன்றெனக் கொண்டு அவ்வாற்றான் நம்மனோர் செய்து போதருந் திருவுருவ வழிபாட்டு நன்முறையை ஒரு சாரார் கழுதல் பொருந் தாதா மன்பதூஉமே யாமென் றுணர்ந்து கொள்க. இனி இறைவனை அங்ஙனம் உருவத் திருமேனியிற் கொண்டு வழிபடுமாறு தானென்னை? அருவ மாகக் கொண்டு வணங்குதலே அமையுமா மென்பார் தடையுமொழிய ஒருசிறிதுகாட்டுதும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/187&oldid=1591157" இலிருந்து மீள்விக்கப்பட்டது