உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

163

செயப்படுதல்

இனி வழிபாடு உருவமான கோலத்தின்கட் செயப் படுதல் வேண்டுமெனக் கூறியதென்னை? அருவமாக இறைவனை வழிபடுதலே முறையாமாலெனின், நன்கு கடாயினாய், அவ்விறைவனை அருவமாகத்தான் வழிபடுதல் வேண்டு மென்னுங் கடப்பாடு என்னை என எதிர்கடாவு வார்க்கு நீர் இறுக்குமாறு இன்றாம். அற்றன்று, காலத்தானும் இடத்தானும் வரையறைப்படாதுவிரிந்த அருவப்பொருள் காலத்தானும் டத்தானும் வரை யறுக்கப்படும் உருவமாக வந்து அருள் செய்யுமென்றல் சாலாதென்பதே எமது கருத்தாமெனின்; நன்றே வினாயினாய், அறிபொருளான உயிரின் கண்ணும் அறிவில் பொருளான உருவருவ வுலகங் களினுமெல்லாம் இறைமுதற் பொருள் ஒருங்கு நிறைந்து அவற்றின் மேலும் விரிந்து செல்லும் பெரும்பரப்பும் முழு முதன்மையு முடையதென்ப தெல்லார்க்கும் ஒப்ப முடிந்தது;

முடியவே,பருப்பொருளான குடம் ஆடை முதலிய வற்றினெல்லாம் நிறைந்திருக்கும் அவ்விறை முதற்பொருள் அந்நிறைவு பற்றி ஒருவாற்றால் வரையறுக்கப் படுமென்பது துணி பொருளாம். அற்றேல், அது முழுமுதற்கடவுளின் நிறை விற்கும் இறைமைத்தன்மைக்கும் இழுக்காம் போலுமெனின் அற்றன்று, குடம்முதலிய பொருண்மட்டின் மடங்கி நிறைந்து மேற் செல்லாதாயின் அஃதுஅதற் கிழுக்காம்; அவ்வாறன்றி அவற்றினுள்ளும் புறம்புமெல்லாம் ஒருங்கு நிறைந்து மேல் விரிந்து நிறையும் முதன்மை யுடைமையால் அஃது அதற்கு ழுக்கன்றாம், குடம் முதலிய பருப்பொருள்களில் நிறையுந் துணையே அதுவரையறைப் பொருளென்பது பெறப்படுமாம் பிறவெனின் அஃதமை யாது, வரையறுக்குங் குடம் முதலிய வற்றின் வரம்பின் கண்ணும் அதுநிறைந்து உள்ளும்புறம்புந் தொடர்புற்று நிற்குமாகலின், தொடர்பின்றி யறுத்து வேறாக்கப்படும் பருப்பொருள்போல் அது கொள்ளற் பாலதன்று. இங்ஙனங் குடம் முதலிய பொருள் நிறைவு பற்றியும் அஃதொருவாறு வரையறைப்படுமென்பது காண்டு மாகலின், உருவப் பொருண் மட்டுமே தான் காலத்தானும் இடத்தானும் வரையறைப்படுமென நீ கூறியது பொருந்தாது. அல்லதூஉம், பிறர் மாட்டு நின்று படைக்கப்படும் பருவுடம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/188&oldid=1591158" இலிருந்து மீள்விக்கப்பட்டது