உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

❖ * மறைமலையம் - 27

மேற் கொண்டு கருப்பையிற் புகுந்து பிறக்கும் எம்மனோரைப் போன் முழுமுதற் பெருங்கடவுளும்வினை வழிப்பட்ட உடம்பு தா ங்கி வந்து அருளுமென வுரைப்பினன்றே அஃது அவன் இறைமைக்கு இழுக்காம்.

கட்புலனாகாத பேரொளிப் பிழம்பாய்ப் பேரறி வுருவாய் இன்ப நிலையாய் விளங்குந் தன் அருட்பெருந் தன்மையே தனக்குரிய வடிவமாகத் தான்நினைந்தவாறே, தன்னை நெஞ்சுருகிக் குழைந்து வழுத்தும் உண்மையன்பர்க்கு வெளிப் பட்டு அருளும்முழு முதன்மையுடையான் இறைவன் என்று கோடுமாகலின் அஃது அவற்கு இழுக் காதல் யாண்டையதென் றொழிக. அற்றேலஃதாக, இறைவன் அங்ஙனம் அருட் கோலந்தாங்கி வெளிப்படுங் கால் தன் பரப்பை யெல்லாஞ் சுருக்கிக் கொண்டு போதரு மோ, அல்லது அப்பரப்பின்கண் ரோரிடத்திலேயே முனைந்து தோன்றுமோ என ஆயும் வழி, அவன்றன் நிறை வனைத்தையும் ஒருங்கு சுருக்கிக் கொண்டு போதரா நிற்குமெனவுரைத்து மாயின் அக்காலத்து நிறைவின்மை பெறப்படுதலானும், ஒரோரிடத்து முனைந்து தோன்று மெனக் கோடுமாயின் அறிபொருளான இறைமுதற் பொருள். வரையறுக்கப் படாமையின் அஃதோரிடத்துத் தோன்றவே பிறிதோரிடத் தில்லையாமெனக் கொள்ளக் கிடத்தலானும் அவை யிரண்டும் அமையாவென்பது தெற்றென விளங்குதலால் இறைவ னுருவமாகத் தோன்று மென்றல் யாங்ஙனம் நிலை பெறுத்தப்படுமெனின்; நன்று கூறினாய், இறைவன் அருட்கோலந் தாங்கி வெளிப் படுங்கால் தன் பரப்பு முழுமையுஞ் சுருக்கிக் கொண்டு போதருவானல்லன்; கன்று ஈன்ற புனிற்றாவின் புனித வுடம்பெங்கும் நிறைந்த நுண் அமிழ்தந் தீஞ்சுவைப் பாலாய் மடியினின்றும் பொழியுமாறு போலவும் விரிதிரைக் கடலிற் குளிர்மிகும் ஒரோ விடங்கள் பனிக்கட்டிகளாய் உறைந்து கிடக்குமாறு போலவும் யாண்டும் விரிந்த இறைவன் றிரு வருள் மெய்யன்பர் பொருட்டு ஒரோவிடங்களிற் முனைந்து உருவாக, அதன் கண்ணே யிருந்து முதல்வன்அரு ள் புரிவனென் றுணர்க. இதுபற்றி யன்றே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/189&oldid=1591159" இலிருந்து மீள்விக்கப்பட்டது