உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ெ

ரு

சைவ சித்தாந்த ஞான போதம் இல்லா முலைப்பாலுங் கண்ணீரு மேந்திழைபா னல்லா யுளவாமா னீர்நிழல்போ - லில்லா அருவாகி நின்றானை யாரறிவார் தானே யுருவாகித் தோன்றானே லுற்று

165

ரு

என்னும் சிவஞான போதத்திருமொழியும் எழுந்ததென் றுணர்க. அற்றேல்,இறைவன் கொள்ளும் உருவத்திரு மேனிக்கும் நம்மனோர் எடுக்கும் பருவுடம்பிற்கும் வேறுபா L ன்னை யெனின்; நம்மனோர் உடம்புகளெல்லாம் வினைவழிப்பட்டுப் பிறராற் படைக்கப்படும்வரையறைப் பொருளாய் நிலையுதலின்றி அழிவுபா டெய்துமியல் பினவாம்; இறைவனுடைய திருமேனியோ ய திருமேனியோ அருளே வடிவாய் அவன் நினைந்தாங்குத் திரண்டெழூஉந் திருவுருவாம்; இறைவனது அருட்டிருமேனி அவன்றன் பெரும்பரப்பு முழுவதூஉந் தொடர்புற்று ஒருவாற்றாற் சிறிதாதலும் ஒரு வாற்றாற் பெரிதாதலுமுடையதாம். யாங்ஙனமெனின்; நெடுங்கடற் பரப்பி லாங்காங்கு உறைந்த பனித்துண்டங்கள் அக்கடல் நீரோடுஇயைபுடையவாமாறு போல வென்க.

6

இனி அது நம்மனோர் உடம்பு போல்வதன்று மற்று அருட்டிருவுருவாம்என்கின்றீரால், அத்திரு வுருவத்தி னியல்புதா னென்னையோ வெனின்; அவ்வுருவத்தினியல்பு நம்மனோரால் அறியவாராதென்று உணர்க. பருப்பொருள் வடிவாய் விளங்கும்இவ்வுலகத்தினியல்பே யறியமாட்டாத சிற்றறிவினராகிய நாம் மனமொழிகளுக்கு எட்டாது விளங்கும் இறைவன்றன் திருக்கோல வியல்பை யறியுமாறு யாங்ஙனம்? மின்னாற்றல் இன்னது என்று அறிந்துள்ளாம். அதன் உண்மையியல்பு இன்னதென் றறியோம்; விசும் பென்ப தொன்றுண்டென்ப தறிவோம், அதன் உண்மை இன்னதென அறியமாட்டோம்; இரும்பைக் காந்தம் இழுப்பது கண்டு காந்தக்கல்லின் ஆற்றலை யறிவோம், அவ்வாற்றலின் உண்மைத்தன்மை இன்னதென்றறியும் ஆற்றலுடையோ மல்லோம்; வ்வாறே உருவருவாய் உள்ள மண், புனல், அனல், கால் முதலிய பொருள்களின் உண்மை யின்னதென் றறிய மாட்டாத சிற்றறிவினராகிய நம்மனோர் இறை வனியல்பை உணர்வேமென்றல் குழறு பாடாய் முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/190&oldid=1591160" இலிருந்து மீள்விக்கப்பட்டது