உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

❖ - 27✰ மறைமலையம் – 27

ஆழ்கடல் நீரில் ஆழவமுக்கி முகந்தாலும் நாழி நால்நாழி தண்ணீரை முகவாது, நாழித் தண்ணீரையே முகக்கும்; அந்த நாழிபோற் சிறிதான உயிரினுணர்வு கடல் போற் பரந்த றைவன் இயல்பை யாங்ஙனம் அளந்தறியும்? ஆகலின், உயிரினறிவு விரியுந் துணையே இறைவன் அருட்கோல

வியல்பு விளங்குவ தல்லது மேற்சிறிதும் விளங்கா தென்றுணர்க. ஆகவே இறைவன்றன் திருமேனி யியல்பு நம்மனோர்க் கறியவாரா தென்பதூஉம், அங்ஙனமாயினும் அவன் றாங்கும் அருட்டிரு வுருவுபற்றி அவற்கு வரக்கடவ தோர் இழுக்கில்லை யென்பதூஉங் காட்டப்பட்ட

6

ன.

இனி, இறைவனை உருவத்திருமேனியிற் கொண்டு வழிபடுதலினும் அருவமாய்க் கொண்டு வழிபடுதலே சிறந்ததாமென வைத்து ஒரு சாரார் வழக்கிடுகின்ற மையின் அவர் செய்யும் அவ்வழக்கும் போலியாமென்பது காட்டு வாம்; பருப்பொருள் வடிவான விழிகளிரண்டும் பருப் பொருள்களையே காண்பனவன்றி நுண்ணியவானவான்

அறிவ

முதலிய பாருள்களைக் காணமாட்டா; வ்வாறே மெய்வாய் மூக்குச் செவி முதலிய உறுப்புக்களும் பருவடி வான ஊறு சுவை மணம் ஓசை முதலியவற்றையே உணரு மாறல்லது வேறு அறியா. இவ் வைம்பொறிகளின் வழியாகப் பஃறலைப் பட்டுச் செல்லும் மனவுணர்வும் அவ்வைம்பொறி வாயிலாய் அந்த பருப்பொருட்டன்மைகளையே தல்லது பிறிதில்லை. இங்ஙனம் பருப்பொருள்களையே அறியு மாற்றலுடைய மனமுதலான பருப்பொருட் கருவிகளுடைய இப் பருவுடம்பி லிருப்பாரான நம்மனோர் ஒருவாற்றானும் இக் கருவிகளால் அறியப்படாத அருவமாகக் கொண்டு இறைவனை வழிபடுமாறு யாங்ஙன மென்றுணர வல்லார்க்கு அவர் சொல்லும் வழக்கு வெறுஞ் சொல்லள வாகவே முடிவதல்லது வேறு பொருட்பேறின்றாம்.

இனி, 'வழிபாடு' என்பதுதான் யாது? மன முதலிய பருப்பொருட் கருவிகளெல்லாம் புறப்பொருளிற் சென்று பதிந்து விரியாது மடங்கி இறைவன்றன் அருட்டிருவுருவின் கட் சென்று பதிந்து உயிரை இறைவன் மாட் றைவன் மாட்டு ஒருமையுறுத்து வதாமன்றோ? அறிபொருளான இரண்டு ஒருங்கு சேர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/191&oldid=1591161" இலிருந்து மீள்விக்கப்பட்டது