உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

167

ஒருமையுறுதற்கு இடை நின்று கூட்டுவிப்பன பருப்பொருட் கருவிகளும்அவற்றை யுடைய உடம்புமல்லவோ? என்னை?

ன்ப வடிவான அருட்கோலத்தைக் காண்டலும் அதன் கண்ணே மனவுணர்வு சென்று பற்றும். பற்றுதலும் அக் கோலத்தின்கண் நிறைந்த இறைவன் மாட்டு உயிர் ஒன்றி ஒன்றா மாதலின்.இதனை உலகியற் பொருள்களினும் வைத்துக் காட்டுதும், இங்ஙனம் எல்லாம் வழக்கிடும் நீவிர் நும்முடம்பின்கண் இல்லாதொழியின் ஈண்டு எம்மெதிர் வந்து நின்று எங்ஙனம் அதனை நிகழ்த்துவீர்? நுமது வழக்கை மறுத்து மெய்ப்பொருள் வலியுறுத்துகின்ற யாம் இவ்வுடம்பின்கட் புகுதாவிடின் எங்ஙனம்எம் மேற்கோளை நிறுத்துவேம்? நாமிருவரும் இக்காலத்து ஈண்டிருந்து வழக் கிடுவதெல்லாம் இரு வேறுடம்புகளுடைமை யினாலன்றோ?

எமது

இங்ஙனம் இருவேறுடம்புகளை நிலைக்களனாக் கொண்டு இரு வேறுயிர்கள் ஒன்று சேரும் வழி இரண்டும் ஒருமையுற்று ன்பமெய்துகின்றன. எழினலங்கனிந்த கொழுவிழி மகளிரும் உலம்பொரு தடந்தோளுறுவலி இளைஞரும் ஒருங்கியைந்து ஒன்று சேரினல்லது இன்ப நுகர்தல் செல்லாமை இனிது விளங்கும்; கன்னலுங் கனிந்த பலாச்சுளையும் மாம்பழமும் வாழையங்கனியும் நறைகமழ் தேனும் ஒருங்கு கலந்த கூட்டுவாய்ப் பெய்துழியல்லது சுவையின்பந் தோன்றாது; நானமும், புழுகுஞ், சாந்தமும் விரைகமழ் மலரும் அருகணையினல்லது மூக்கினாற் பிறக்கும் நறுமணவின்பந் தோன்றாது; தீங்குழலோசையும் யாழிய லோசையுங் கேட்பினல்லது செவியினாற் பிறக்கும் ஓசை யின்பந் தோன்றாது; செழும்பட்டாடையிற் சமைத்த வகை யமளியுறினல்லது மெய்யினாற் பிறக்கும் ஊற்றின்பந் தோன்றாது. ஆகவே, இன்பந் தோன்றுதற்கு இருபொருட் சேர்க்கை இன்றியமையாதாகலானும், அச்சேர்க்கை தானும் இருவகை யுடம்புகளையே நிலைக்களனாக் கொண்டு நிகழ்த லானும்இறைவனை வழிபட்டு அவனை ஒன்றியைந்து இன்பம் நுகர்கின்ற உயிருக்கு ஓருடம்பும் அங்ஙனந் தொழப்படும் முதல்வனுக்கு ஓர் உடம்பும் வேண்டுமென்பது சொல்லாமே யமையும். அங்ஙனமாயினும் உயிருக்கு உண்டான உடம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/192&oldid=1591162" இலிருந்து மீள்விக்கப்பட்டது