உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

❖ ❖ மறைமலையம் - 27

வினைக்கீடாக மாயையிற் றிரட்டப் பட்டதா மென்பதூஉம், இறைவனுக்கு உண்டான உடம்பு இரக்கத்தால் அருளிற் றிரண்டு எழுந்ததா மென்பதூஉங் குறிக்கொண்டு போற்றற் பாலனவா மென்க. இங்ஙனம் இருவகை அறிவுப் பொருள்கள் தம்முள் ஒன்றிணங்குதற்கு இரு வேறுடம்புகள் வேண்டு ரு மென்னும் நுட்பந் தெரித்தற் கன்றே, தமிழிலக்கண வாசிரியர் நிலைமொழியீற்றினின்ற உயிரோடு வரு மொழி முதனின்ற உயிரிணைதற்கு இடையே ஓர் உடம் படுமெய் தோன்றுமென் றுரையா நிற்பர். இங்ஙனம் உண்மை மறைபொருள்களை யெல்லாந் தந்து இலக்கண நூலுள்ளும் விளங்க வைத்தல் தமிழ் நூலாரிடத்தன்றி ஏனை மொழி நூலாரிடைக் காண்ட லரிது என்பது லரிது என்பது இதனொடு படுத்து ஈண்டு விதந்துரைத்து அத்தமிழ் மொழி மாட்சி குறிப்பானறி யவைத்தாம். இது நிற்க.

இனி, உடம்புகளெல்லாந் தம்மை யுடையானுக்குப் பல்வகைத் துன்பங்களுந் தந்து வேறுபடுத்தக் காண்டலின், அது பற்றி இறைவன் றாங்கிவரும் அருட்டிருவுருவும் அவனை வேறுபடுத்தாதோ வெனின்; படுத்தாது, உடம்புகளுடை

ரான உயிர்களினியல்பு பற்றியே உடம்புகளின் றன்மை யறிவதல்லது, உடம்பினியல்பு பற்றி உயிரை யளந்தறிதல் ஒருசிறிதும் பொருந்தாது, யாங்ஙனமெனிற் கூறுதும், இருநில முழுதுந் தன்னடிப்படுத்துச் செங்கோலோச்சுவானான முடியுடை மன்னன் தன் இரும்பொருள் வைப்பிற் கேற்பவும் வளங்கட்கேற்பவுந் தலைமை செலுத்துமுறைகட்கேற்ப வும்மிக அகன்ற உயர்ந்த வெழுநிலை மாடங்களும் மாளிகை களும் அமைத்து அவற்றின்கண் இருப்பக் காண்கின்றோம்; விலங்கினங்களைச் செகுத்துண்டு மழையினும் வேனிலினும்

உழ

ன்று திரிவானான வேட்டுவன் தன்னியல்புக் கேற்ப வைவேய்ந்த புல்லிய குடிலில் ஒதுங்கியிருந்து வாழ்நாட் கழிப்பதூஉங் காண்கின்றோம். உறையுள் கொள்கின்ற அரசன் வேட்டுவன் இயல்பு பற்றியே உறையுள் அமைக்கப் படுதல்போல உடம்புகளைத் தாங்கி வருகின்றவரான இறைவனும் உயிரும் என்னும் இவரியல்பு பற்றியே அவர் தாங்கிவரும் உடம்புகளுங் கருதி அளந்தறியற் பாலனவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/193&oldid=1591163" இலிருந்து மீள்விக்கப்பட்டது