உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

  • சைவ சித்தாந்த ஞான போதம்

169

இறைவன் முற்றறிவும் முழுத்தன்மையும் வரம்பிலாற்றலுந் தன் வழியனாதலும் அருளுறையுளாதலு முடையனாகலின் அவன் றாங்கிவருந் திருக்கோல வியல்பு எம்மனோரா லறியவாராத் தூய்மை பெரிதுடையதாதலும், உயிர் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் பிறர் வழிப்படுதலும் மலத்தான் மறைக்கப்படுதலும் பிறவுமாகிய குறைபாடுடையனாகலின் அவன் மேலிட்டு வருமுடம்பும் வாலாமை பெரிதுறுவ தாதலும் நன்றுணரக் கிடக்கும். இவ்வுண்மை கடைப் பிடித்தன்றே அருணந்திசிவமும்,

மாயைதான் மலத்தைப் பற்றி வருவதோர் வடிவ மாகு மாயவா ணவம கன்ற வறிவொடு தொழிலை யார்க்கு நாயக னெல்லா ஞானத் தொழின்முத னண்ண லாலே காயமோ மாயை யன்று காண்பது சத்தி தன்னால்

என்று சிவஞான சித்தியாரில் ஓதி யருளியதூஉ மென்க. இங்ஙனமாகலின் உடம்புகள் தாங்கிவரும் ஒப்புமை பற்றியே அவையிரண்டற்குமுள்ள வேற்றுமை யுணராது அவை. தம்மையுடையாரைக் கட்டுறுத்துமெனக் கூறுதல் சிறு மகார் கூறுங் குழறு பாட்டுரையாய் முடியுமென்க. அதுநிற்க.

இனி, உருவத் திருமேனியிற் கொண்டு இறை வழிபாடு ஆற்றுகின்ற அறிவுடையோர்க்குத் தாம்அன்பு முதிர்ச்சி யடைந்து இறைவனோடொன்றி யொன்றறக் கலக்கும் அத்துவித முத்திப் பெரும் பேறு வாய்க்குமென்பதுமேற் கூறியவாற்றால் இனிதுவிளங்கும். என்னையோ வெனிற்; குழவிப்பருவந்தொட்டு முதுமைப் பருவங்காறும் உலகியற் புறுப்பொருளோடு மனவுணர்வு ஒற்றுமையுறுகின்ற நெறியானே மக்களெல்லாரும் அறிவு விளக்கமும் நாகரிக வளர்ச்சியு மெய்தி வருகின்றாரென்பதுமேலே விளக்கிப் போந்தாம். ஆதலான், மக்கள் மனவுணர்வு எக்காலத்தும் உலகியற் புறப்பொருளொன்றனைப் பற்றியே நிற்குமல்லது, தானே வேறு பிரிந்து தனித்து நிற்குந் தனி முதலன்றாம். மனவுணர்வு ஒன்றையும் பற்றாவாறு வேறு பிரித்துத்தனியே ஒருவழி நிறுத்துவே மென்பாருரை வெறுஞ் சொல்லளவே யன்றி அஃது அவர் கூறுமாறு அடங்கு மியல்பிற்றன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/194&oldid=1591164" இலிருந்து மீள்விக்கப்பட்டது