உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

❖ ❖ மறைமலையம் - 27

ரு

என்பது சிறிது கருதிப் பார்ப்பார்க்கும் பொள்ளெனப் புலனாம். இப்பெற்றியுணர்ந்தன்றே “காடுங்கரையு மனக் குரங்கு கால்விட்டோட வதன் பிறகே, யோடுந் தொழி லாற் பயனுளதோ” என்று தாயுமான சுவாமிகளுந் திருவாய் மலர்ந்தருளினாரென்க. இத்தகைய மனவுணர்வின் பெற்றி தேறாது யாம் அருவமாகக் கொண்டு இறைவனை வழிபட மாட்டுவே மென்பா ரென்கடவரென்க.அவர் இரு விழியினையும் மூடிக்கொண்டு வானத்தை நோக்கி நிற்பா ராயினும் அவர் மனவுணர்வும் அங்ஙனம் நில்லாது; மற்றைத் தேயத்திலிருக்கும் அவர் மனைவியை நாடிச் செல்லும், மைந்தரை நாடிச் செல்லும், நேயரை நாடிச் செல்லும், பொருள் வருவா யெதுவென்றாராயும், புதல்வர்க்குப் பொருள் தாகுக்குமாறு யாங்ஙனமென்று ஆராயும், உயர்ந்த நிலைகள் எமக்கெப்போது கிட்டு மென்னும், மன்னவர் காண்டாட வாழுமாறெப்படி யென்னும், இ ன்னும் எத்தனையோ அரும் பெருஞ் செயல்களை யெல்லாம் ஒரு நொடியிற் செய்ய வல்லும்; இத்தகைய மனத்தாலும் அருவமாக இறைவனை வழிபடுதல் எவர்க்கேனுங் கூடுமோ?

எவர்

·

அன்றி அங்ஙனஞ் சொல்வார் சொற்களை தாமும் நம்புவார்களோ? அறிவுடையீர் சிறிதாராய்ந்து சான்மின்! காணப்படும் உலகியற் பொருளின் கண் மனவுணர்வைப் பதித்தன்றே காணப்படாத இறைவனை யறிந்து வழிபட்டு உய்தல் வேண்டும்; இது பற்றியன்றே தெய்வப் புலமைத் திருவள்ளுவனார் “அகர முதல வெழுத் தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு (குறள் - 1) என்றோதிக் கடவுள் உண்மை தெரிப்பாராயினதூஉ மென்க. நம் மனவுணர்வின் விளக்கமே உலகியற் பொருள்களை ஒன்றனோடொன்று ஒப்பித்து அவ்வழி வளர்ந்துவாரா நிற்கின்றது; “நிழலருமை வெயிலிற் சென்றால் தெரியும்" என்னும் பழமொழியும் இதனை வற்புறுத்தும். வெயிலையே யறியாதவனுக்கு நிழலின் றன்மை யறிய வாராது. ஒளியை யறியாதவனுக்கு இருளின் றன்மை யறிய வாராது, தீஞ்சுவை யறியாதவனுக்குப் புளிஞ்சுவை யின்னதென்று அறிய வாராது, நறுநாற்ற மறியாதவனுக்குத் தீ நாற்றந் தெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/195&oldid=1591165" இலிருந்து மீள்விக்கப்பட்டது