உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

171

வாராது, வாராதாகவே, உலகியற் பொருளுணர்வு சிறிது மின்றி விலங்கினங்களினுந் தாழ்ந்தவராதல் வேண்டும் மக்க ளெல்லாம். மற்று அவரெல்லாம் இன்றியமையா அவ் வொப்புமையுணர்வு பற்றியே அறிவு விளக்கம் பெறக் காண்டலால், மேலும் அவ்வொப் புமை யுணர்வுதானே அவரை மறுமைப் பெரும் பேற்றின் கண் உய்க்க வல்லதாம். ஒப்புமை யுணர்ச்சி இத்துணைப் பெருஞ் சிறப்பினதாதல் பற்றியன்றே அளவை நூலாரும் உவமையை ஏனையளவை களோடு விதந் தெடுத்துக் கொண்டார்.

இங்ஙனம் உலகியற் பொருள்களைப் பற்றி யன்றி மனவுணர்வு நில்லாமையானும், அம்மன வுணர்வும் ஒப்புமை பற்றியன்றிப் பெருகாமையானும் இறைவனை உருவத் திருமேனியிற் கொண்டு வழிபடும் முறையே உண்மை யாமல்லது ஏனைய வெல்லாம் வெறுஞ் சொல்லளவாகவே முடியுமென்றொழிக. அல்லதூஉம் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து பரந்த முழுமுதற் பெரும் பொருள் உருவமாகக் காண்டு வணங்கப்படும் ஒரு ாருளின் கண்ணும் நிறைந்திருக்கும் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தமையாற் றிருவுருவ வழிபாடு ஆண்டும் பொருத்தமாவதேயன்றி இழுக்காமாறு இல்லை.

அற்றேலஃதாக, சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டாமல் விளங்கும் முழுமுதற் பெருங்கடவுளை அவையிரண்டிற்கும் எளிவந்து விளங்குவதொரு பொருளில் வைத்து வணங்குதல் நிரம்பாதாமெனின்; அறியாது கடாயினாய், சொல்லுக்கும் மனத்திற்கும் எளிவந்து விளங்கும் ஏனை உலகியற் பொருள் போல இறைவனது திருக்கோலத்தையும் பிறழக் கொண்டு அவ் வாற்றால் அது பொருந்தா தென்றல் அறியாமையே யன்றிப் பிறிதில்லை. சொல்லுக்கும் நினைவுக்கும் புலனாம் உலகியற் பொரு ளெல்லாம் இது இதுவென்று சுட்டியறியப் படுதலான் வரையறைப்படும் சிறு பொருள்களே யாம்.

றைவனது எங்குமுள்ள முழுமுதன்மை அங்ஙனம் இது வென்று சுட்டியறியப்படுவதன்றாகலானும், அவன் அன்பர்க்கு அருள் வழங்குதற் பொருட்டு மேற் கொண்டு வரும் அருட்கோலம் அவன் பரப்பு முழுவதூஉம் இயை புடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/196&oldid=1591166" இலிருந்து மீள்விக்கப்பட்டது