உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் - 27 –

தாகலானும், அஃது அவைபோல வரை யறைப்படும் வரம்புடைப் பொருளன்று; மற்று வரையறைப் படாது விரிந்த வரம்பில் பொருளே யாம். இவ்வாறாகலின், சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாத அப்பெரும் பொருள் அவை தமக்கு எளிவந்து தோன்றுத லாற் போந்த இழுக்கொன்றுமில்லை யென்றுணர்க, அற்றன்று, சொல் நினைவுகளுக்குப் புலனாம் பாரு ளல்லாம் அழியக் காண்ட லால் அங்ஙனம்

நினைவிற்கு விளங்கித் தோன்றும் அவ்வருட்டிருவுருவம் அழிதல் வேண்டும், அழியவே வேறுபாடின்றி யிருக்கும் இறைவன் வேறுபாடெய்தினா னென்று கொள்ளப்பட்டு மாறு பாடாமெனின்; மாறு பாடில்லை, மாறு பாடில்லை, மனத்தினாற் பற்றப்படும் உலகியற் பொருண் மட்டுமே அங்ஙனம் அழியக் காண்டு மன்றி, அறிபொருளாய் உலகியற் பொருளைக் கடந்து செல்லுங் கடவுட் பொருளும் அங்ஙனம் அழிதல் வேண்டு மென்னும் யாப்புறவு அதனாற் பெறப்படாமையின் அவ்வாறு கூறுதல் அடாதென் றொழிக, மேலும், மனத்திற்குப் புலனாம் அத்துணையே பற்றி உலகியற் பொருளையும் உலகினை யிறந்து நின்ற கடவுட் பொருளையும் ஒன்றென்று கூற ஒருப்படுதல் பெரிதும் ஏதமாமென்று மறுக்க. மன வுணர்வின் கட்டோன்றும் றைவனது திருக்கோலம் அவன்றன் பரப்பு முழுவதூஉம் யைபுடையதா மென்ப தற்குப் பிட்டு வாணிச்சி பொருட்டு ஒட்டவடிவங்கொண்டு எழுந்தருளிய பெருமான் றாங்கிய பிரம்படி இயங்குமுயிர் நிலையுயிர் முழுதும் பட்ட வியத்தகு நிகழ்ச்சியே கரிபோக்கி யினிது விளக்கு மென்க; இவ்வரலாற்று மெய்ம்மையில் ஐயுறவுக் கொளயாரும் இடம்பெற மாட்டா ரென்பது மேலே வரலாற்றியல் வழாமையுரைத்து நிறுத்தினாம்; ஆண்டுக் காண்க. அற்றேல், உரை நினைவுக்கு எட்டாதான் என்று அவ்வாறு இறைவனை றைவனை ஓதியதுதான் என்னை யெனிற் கூறுதும். அறியாமை வழிப்பட்டுத் தன்னறிவு முனைப்பால்

றைவனை யாமறிந்து வழிபட மாட்டுவே மென்று தருக்குவார் மனவுணர்வுக்கு ஒருவாற்றானும் புலனாத லின்றிப் பரந்துபட்ட நிறைவாம் முழுமுதன்மை யுடைய னாகலின் அவ்வாறு சொல்லப்பட்ட தென்க. அருள் வழிப்பட்டுச் சிவவுணர்வு முனைப்பால் அருட்கருவிகளாய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/197&oldid=1591167" இலிருந்து மீள்விக்கப்பட்டது