உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

-

மறைமலையம் - 27

யாம். அதுபற்றி அவை எள்ளற் பாலன வல்ல. மற்று அவ்வுணர்ச்சியின் அருமைப்பாடும் அது முறை முறையே முதிருமாறும் உலக மியாங்கணும் அஃதொன்று தானே வேறு வேறாய் நிகழுமாறும் பிறவும் நன்றாராய்ந்து கோடல் சமயப் பொருட் பொதுமை யுணரும் வேட்கை யுடையரான மெய்யுணர்வுடையார்க்கு இன்றியமை யாத கடமையாம்.

அதுநிற்க.

அறிவு விளங்கப் பெறாது விலங்கினத்தோடு ஒப்ப வைத் தெண்ணப்படும் அத்துணை நாகரிகமற்ற நிலை யிலிருக்கும் மக்கட் பகுப்பினர்மாட்டும் சமய வுணர்ச்சி நிகழ்த்தல் அவர்தம் வரலாற்றால் இனிது விளங்குதலின், அச்சமய வுணர்ச்சிதானும் அவர்க்கு முன்னே நிகழும் அச்சங் காரணமாகத் தோன்றுவதாயிற்று. அவ்வச்சந் தானும் இடி, மழை, மின்னல் முதலான உலகியற் புறப்பொருள் விரைந் தியங்கும் இயக்கத்தானும் நோய், சாக்காடு முதலாகத் தம்மாட்டுத் தோன்றும் பிழைகளானும் அவர்க்குத் தோன்றா நிற்கும்.அவ்வச்சம் நிகழ்ந்தவழி அவர் அவ்வச்சத்தினீங்கி நலம் பெறுமாறு எங்ஙனமென்று ஆராய்வாராயினர். அங்ஙனம் ஆராய்ந்த விடத்து விசும்பின் கண்ணே ஒரா வொரு காலத்து விரைந்தியங்கும் இடி, மழை, மின்னல் முதலிய அவையெல்லாம் மிகவல்லதான மற்றொரு பொருளின் ஏவல் வழிநின்று இயங்குகின்றனவென்றும், அவற்றை அங்ஙனம் இயக்கும் அப்பொருள் வெறு வெளியில் நிலை திரியா தியங்கும் ஞாயிறு திங்களையன்றி வேறு கட் புலனுக்குத் தோன்றாமையின் அவை தாம் வணங்குதற் குரிய முழுமுதற் பொருளாமென்றும் அறிவாராயினர்.

இம்முறை பற்றியே ஞாயிற்றினை வழிபடுஞ் சௌர மதமும், திங்களை வழிபடுஞ் சந்திரமதமும் உண்டாயின. மழையினுதவியைப் பெரிது வேண்டி நிற்கும் தேயங்களினுள் ளார் மழைக் கடவுளாகிய இந்திரனையும் வணங்கி வந்தார். ங்ஙனம் வானத்தின் கண்ணே அச்சநிகழ்த்தும் அப் பொருள்களை வழிபடுமாறுணர்ந்தபின், இந்நிலவுலகத்தின் கண்ணேயும் அங்ஙனம் அச்சம் நிகழ்த்துஞ் சிற்றுயிர்களை வணங்கத் தலைப்பட்டார். தம்மினத்தாரிற் சிலர் பாம்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/199&oldid=1591169" இலிருந்து மீள்விக்கப்பட்டது