உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ

சைவ சித்தாந்த ஞான போதம்

175

கடித்திறக்கக் கண்டு பாம்பினை வழிபடுவாராயினார். தம்முட் சிலர் தறுகணாளராய்ப் பலரை நலிந்து தலைமை செலுத்திப் பின் இறந்தொழிந்தவழி அவரையுந் தெய்வங்களாகக் கொண்டு பரசினார். தம்முள் வேறு சிலர் நல்லறிவுடைய ராய்ப் பலர்க்கு நல்லன பலவுஞ் செய்து இறந்துபட்ட வழி, அந்நல்லோரை வணங்கா தொழியின் யாது நேருமோவென வருக் கொண்டு அவரையும் வணங்குவாராயினர். இவ்வா றெல்லாம் அவர் வழிபாடு செய்தற்குக் கருத்தொருப்பட்டு அது செய்யப் புகுதுகையில் தம்மறிவும் உணர்வும் ஒரு வழிப்பட்டு நில்லாதுசிதர்ந்து பல தலைப்படுதலின் அவர் அதன்கண் இடர்ப்பாடு பெரிதடை வாரானார். அவ்விடர்ப் பாடு அவரறிவை நுணுகி விளங்கச் செய்தலின், அவர் தாம் வழிபடக் கருதும் பொருளினுரு வத்தைக் கல், மரம் முதலிய பிற பொருளின்கட் செதுக்கி அவற்றை எதிர்நிறுத்தி அவற்றிற்குத் தம் வழிபடு கடன்களைச் செலுத்தத் துவங்கினார்.

அங்ஙனம் வழிபடும்போதெல்லாம்

அவரறிவு முன்போற் சிதர்ந்து போகாமல் ஒருங்கி அவ்வுருவத்தின் கண்ணே சென்று பதிதலால் அவர் அவ்விக்கிரக வாராதனை யின் நலப்பாடுணர்ந்து அதனைக் குறிக்கொண்டு போற்றத் தலைப்பட்டார். இங்ஙனம், எத்துணை யிறப்ப இழிந்த ங்ஙனம்,எத்துணை வகுப்பினராயினும் அவர் மாட்டுந் திருவுருவ வழிபாடு காணப்படுகின்றது. இனிக் கல்வி யறிவான் மிகச் சிறந்த நன்மக்களும், இயற்கை யறிவாற்றன் மிக முதிர்ச்சியடைந்து விளங்கும் பெரியவரும் உருவத் திருமேனியிற் கொண்டு முதல்வனை வழிபடுவார்க்கன்றி ஏனையோர்க்கு அம் முதல்வன்பால் அறிவு ஒருங்கி அன்பு உளதாதல் ஒருசிறிதும் செல்லாதென்னுங் கருத்துடையர். அற்றாயிற், கிறித்தவருள் ஒரு சாராரும், மகமதிய மதத்தாரும் இறைவனை உருவத் திருமேனியிற் கொண்டு வழிபடுதல் பொருந்தாதெனக் கூறுத லென்னை யெனின்; நன்று கடாயினாய், பண்டைக் காலந் தொட்டு வருஞ் சமயிகளெல்லாந் தம்மியற்கை நல்லறிவால் திருவுருவ வழிபாடு செய்து போதரக் காண்டலானும், க்காலத்து இடை டையே தோன்றிய ஒரு சில சமயிகளே தஞ்செயற்கையறிவால் தாம் வேண்டியவாறு பொருளில்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/200&oldid=1591170" இலிருந்து மீள்விக்கப்பட்டது