உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

❖ மறைமலையம் – 27

L

மொழிந்து திருவுருவ வழிபாட்டை மறுத்த லானும் அது பற்றி ஈண்டைக்காவதோர் இழுக்கில்லை யென்றொழிக. அல்லதூஉம், உருவத் திருமேனியிற் கொண்டு வழி படுதல் பொருந்தாதெனக் கூறும் மற்றவர் தாமும் முதல்வனை யாங்ஙனம் வழிபட மாட்டுவாரென்று நுணுகி நோக்க வல்லார்க்கு அவருரை வஞ்சம் பொதிந்த வழுவுரை யாமென்ப தினிது விளங்கும். திருக்கோயில்களில் அவர் விழி பொத்திக் கொண்டு விசும்பு நோக்கி நிற்ப, அவர் உள்ளம் அவர் வழிப்படாமற் காடுங்கரையும் அலைந்து திரியும்; அல்லதவர் இறைவன் மாட்டு மெய்யன்புடையராயின் அவருள்ளந் தன்கண் அவ்விறைவர்க்கு ஓருருவத்தை எழுப்பி அவரறிவினை அதன்கட் பதித்துவிடும். கண்ணறிவிற்குப் புலனாம் வடிவத்தை வழிபடுதற்கு அவர் உடம்படுகில ராயினும், உள்ள வறிவின்கட் புலனாம் ஓருருவத்தை அவர் யாங்ஙனம் நீக்கவல்லார்?

உள்ளவறிவின்கண்ணும் அவ்வுருவம் புலனாகாமல் நீக்கி வைத்து வழிபட வல்லே மென்பாராயின், அவர் செய்யும் அவ்வழிபாடு தம் பெண்டிரை நோக்கிச் செய்யும் வழிபாடாம், தம் புதல்வரை நோக்கிச் செய்யும் வழிபாடாம். தம் நண்பரை நோக்கிச் செய்யும் வழிபாடாம்; மற்றுஞ் சிலரை நோக்கிச் செய்யும் வழிபாடாம்; அவர் அங்ஙனஞ் செய்யும் வழிபாடு இறைவனை நோக்கிச் செய்ததாக மாட்டாது. உயிர்களின் உள்ளவறிவு சார்ந்த பொருளின் வண்ணமாய் வீறி விளங்குதலன்றித் தான் அவற்றின் வேறாய்ப் பிரிந்து விளங்கு மியல்பினதன்று. மனநூற்புலமை கைவந்தோரும் உள்ளத்தி னியற்கை அவ்வாறாதல் இனிது விளங்க விரித்துக் காட்டுவர் ஐம்பொறிகளுக்குப் புலனா காத பொருள் மனத்தின்கட் புலப்படுமாறில்லை. கட்புல னாய் விளங்கும் ஓருருவத்தைப் பற்றி நின்று நினையா தொழியின், அம்மனம் வேறு பிறவுருவங்களைப் பற்றிக் கொண்டு அவர்க்குக் கடவுளுணர்வு வரவொட்டாமல் தடை செய்தல் ஒருதலை. இப்பெற்றி யெல்லாம் மேலே விரித்துக் காட்டினாம். பின்னும் விரிப்பிற் பெருகுமாதலின் இத்துணையினமைகின்றாம். ஈண்டு காட்டியவாற்றால் இறைவனை உருவத் திருமேனியிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/201&oldid=1591171" இலிருந்து மீள்விக்கப்பட்டது