உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

177

கொண்டு வழிபடும் முறையேதான் அறிவின் நுட்பத் திற்கும், மக்கள் மனவியற் கைக்கும் மிக இயைந்ததா மன்பது பறப்படுதலின், அருவமாக இறைவனை வழிபடற்பாற் றென்று வாளாது வழக்கிடுவார் போலி யுரைகள் பொருட் பேறிலவா யொழியு மென்றுணர்க.

இனிப் பிரமசமாசத்தாரில் ஒரு சாரார் ஆரிய வேதோப நிடத நூல்களை மேற்கோளாகக் கொண்டு, அவற்றின்கட் டிருவுருவ வழிபாடு சொல்லப்படாமையின் அந்நூல் வழிநின் றொகுழுவார்க்கு விக்கிரகாராதனை செய்தன் முறையாகா தென்று கூறுகின்றார்.

6.

உமாசகாயம்

த உலகியற் பொருள்களில் வெள்ளிடை மலைபோல் விளங்கித் தோன்றும் ஞாயிறு திங்கள் தீ முதலியவற்றின் வழிபாடு இருக்குவேதம் எங்கணும் இனிது காணக் த்தலானும், இருக்குவேத விறுதிப் புருடசூத்த மந்திர வுரையின் கண்ணே இறைவனுக்கு உறுப்பின் பாகுபாடுகள் நன்றெடுத்துச் சொல்லப்பட்டமையானும், மிகப் பழைய கேனோபநிடதத்தில் முதல்வன் இயக்கவுருவந் தாங்கித் தோன்றித் தேவர்க்கு அருள் செய்த வரலாறு விரித்துக் காட்டப்படுதலானும், பின்னெழுந்த கைவல்லியம், அதர் வசிகை முதலிய வுபநிடதங்களினும் பரமேசுவரத் திரிலோசனம் நீலகண்டம்” முதலிய உருவத் திருவடையாளங்கள் கிளந்தெடுத்து மொழிந்திடப்பட்டமை யானும், புறத்தே தோன்றும் உலகத்திற்கு நெஞ்சத் தாமரை யாக விளங்குந் தில்லையம்பலத்திலே திருக்கூத்தி யற்றும் முதல்வனை வழிபடுமாறு போல அகத்தே இவ்வுடம் பினுள் உள்ளத் தாமரையிலுள்ள அருள்வெளியிலே திருக்கூத்தி யற்றும் இன்பக் கூத்தனையறிந்து வழிபடுமாறு கூறுந் தகரவித்தையினியல்பு சாந்தோக்கிய முதலான பழைய உபநிடதங்களில் வகுத்துக் கூறப்படுதலானும், யோக நூல் செய்த பதஞ்சலி பகவானும் பிரத்தியாகாரந் தாரணை முதலான யோகப் பயிற்சியினெல்லாம்இறைவனைக் குறிகளா னறிந்து வழிபட்டு உள்ளத்தை ஒருமையுறுத்துக வென்று கட்டளை தருதலானும், மக்களின் அளவை யுணர்வைப் பாகுபடுத்துக் கூறிய நியாயம் வைசேடிகம் முதலான

?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/202&oldid=1591172" இலிருந்து மீள்விக்கப்பட்டது