உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

❖ ❖ மறைமலையம் – 27

நூலுடையார்க்கும் அஃதொப்ப முடிந்தமை யானும், வேதாந்த நூல் செய்த வாதராயண ரெனப்படும் வியாச முனிவரும் தமது பிரமமீமாஞ்சையின் முதலத்தி யாயம் இரண்டாம் பாதம் “குஹாம் ப்ரவிஷ்டா வாத்மா நௌஹி தத்தர்ச நாத்" என்னும் 11ஆஞ் சூத்திரத்தானே இதயக் குகையின்கண் இறைவனை வழிபடுந் தகரோபாசனை எடுத்து மொழித லானும், வேதோபப் பிருங்கணங் களான பதினெண் புராணங் களினும் சிவ ரகசியம் பாரதம் இராமாயண முதலான இதிகாசங்களினும் முதல்வனருட்குறி நிறுத்த திருக்கோயில் வழிபாடு காணப்படுதலானும், தேவரும் முனிவரும் இ றைவனுடைய அருளுருவத் ய அருளுருவத் திருமேனியை வழிபட்டு ஆங்காங்கு நிலை நிறுத்திய திருக்கோயில்கள் இந்நாவலந்தீவு யாங்கணும்பரந்து பட்டுக் கிடத்தலானும், அத்திருக்கோயில் வழிபாடு தானும் பிற்காலத்தன்றிப் பல்லாயிர ஆண்டுகட்கு காலந்தொட்டே நடைபெற்று வருதலானும், பார்ப்பனர் நாடொறும் உருச் செய்து போதருங் காயத்ரி மந்திரவுறை யுளிற் பொன்னுருவனான இறைவன் பர்க்க னென்னுந் திருப்பெயரோடு கூடி விளங்க லானும், திருஞான சம்பந்தப்

முன்னதான

பண்டைக்

பிள்ளையார் முதலான அருட் குரவரும் முதல்வன

தருளுருவத் திருமேனி வழிபாட்டிற் றலைநின்றமை எல்லா ரானும் அறியப்படுதலின் அஃதான்றோர் ஒழுகலாறாய் நிலையுதலானும், பிறவாற்றானும் அங்ஙனங் கூறும் பிரம சமாசத் தாருரை பொய்படு போலியுரையாதல் தெளியப் படுதலின் அவர் ஆரவார வுரைபற்றி மயங்குவார் ஈண்டு யாருமிலர்.

என்று இதுகாறும் விரித்தவுரையால் இந்நாவலந் தீவின்கணுள்ள நன்மக்கள் றைவன் தருளுருவத்திரு மேனியிற் சய்த போதரும் வழிபாடு அருளுருவ வழி பாடாவதன்றி விக்கிரகவாராதனையாதல் ஒரு சிறிதுஞ் செல்லாதா மென்பதூஉம், திருவுருவத்தின்கட் செய்யும் வழிபாடுபற்றி இறைவனது முழுமுதற் பரப்பாம்இறைமைத் தன்மைக்கு வரக்கடவதோ ரிழுக்கில்லை யென்பதூஉம், அருவமாக இறைவனை நினைக்க வல்லே மென்பாருரை

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/203&oldid=1591173" இலிருந்து மீள்விக்கப்பட்டது