உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

❖ • மறைமலையம் - 27

உடம்பாடே யாகையாலும் மக்கள் சிற்றறிவுடைய ரேயாயினும் அவர்களுட் பேரன்பும் பேரறிவும் உடை யாரும் உளராகலின் அவர் இறைவன்பால் மிக்கெழுந்த தூய பேரன்பின் வயத்தராகி ஆக்கி வழி பட்ட சிவலிங்கக் கல்வடிவு மண் வடிவுகளை ஏனைச் சிற்றறிவினார் செய்த வைகளோடுஒப்ப வைத்து இகழ்ந்துரைத்தல் பொருந்தா தாகையாலும், மக்களுள்ளும் அறிவுமிக்காரால் வரையப் பட்ட ஓவியங்களையுங் கடைந்து திருத்தப்பட்ட கற்பாவை பொற்பாவைகளையும் பலர்க்குப் பலவகையிற் பயன்றரும் நீராவிப் பொறி மின்னற்பொறி அச்சுப் பொறி பறவைப் பொறி முதலானவைகளையும் மக்களாற் செய்யப்பட்டமை பற்றி இகழ்ந்து பேசாமல் அவை தம்மை யெல்லாம் மிகவுங் கொண்டாடிப் பேசுவாரையே எங்குங் காண்கின்றோ மாகையாலும், மக்கள் தம் அறிவொளியால் அமைப்பன வெல்லாம் இறைவனது அருளொளியோடு ஒருங்கு கூடியே நிற்குமாகலின் அ வ தம் தம்மை ஏனை அறிவில்லாப் பொதுமக்கள் செயலில் வைத்து இழித்துக் கைவிடுதல் தம் பிறவிப் பயனை இழப்பதற்கே இடஞ்செய்யுமாகையாலும், மக்களாற் செய்யப்பட்ட தென்னுங் காரணம் ஒன்றே கொண்டு கல் வடிவு மண் வடிவுகளில் ஆக்கிய சிவலிங்கத் தை வழிபடாதொழிதல் எவர்க்கும் நன்றாகாதென்க. தமக்குப் பெரிதும் அன்பரா யுள்ளாரைத் தாமே ஓவியத்தில் வரைந்து பார்த்துந், தம்மால் வரைதல் இயலாவிடிற் பிறரைக் கொண்டு அவரதுருவினை அத அதன்கண் வரை வித்துப் பார்த்தும் மகிழ்ச்சியிற் பொங்கு வாரை வாரை ஆங்காங்குக் ஆங்காங்குக் காண்டும் அல்லமோ? அங்ஙனமே இறைவன்பால் அன்பு மீதூரப் பெற்றாரும் அவன் இயல் பாகவே முனைத்து விளங்குந் தீயுருவினைக் கல்லிலும் மண்ணிலுந் தாமே யமைத்தும் பிறரைக் கொண்டு அமைப்பித்தும் வழிபட்டு மகிழ்மீக் கூர்கின்றாரென்க.

அற்றேல், அனற்பிழம்பில் இயற்கையே முனைத்து விளங்குமாப் போற் கல்வடிவு மண்வடிவுகளிற் கடவுள் முனைத்து விளங்குதல் இல்லாமையால், அப்பருப்பொருள் வடிவுகளில் வைத்துக் கடவுளுக்கு வழிபாடாற்றுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/223&oldid=1591193" இலிருந்து மீள்விக்கப்பட்டது