உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சித்தாந்த ஞான போதம்

199

பயமின்றாய் முடியும்போலுமெனின்; அற்றன்று கல் மண் வடிவுகளில் இயற்கையே முனைத்து விளங்காத முதல்வனை அவை தம்மில் முனைத்து நின்று அருள் செய்யுமாறு வேண்டுதற் பொருட்டன்றே திருக்குட முழுக்கு என்னும் வினை ஆன்றோரால் நடாத்தப்பட்டு வருகின்றதென்க.

இனி, அக்குடமுழுக்கு வினையின் கருத்தினை ஈண்டொரு சிறிது விளக்கிக் விளக்கிக் காட்டுதும், இறைவன் இயற்கையே முனைத்து விளங்கும் இடனாய் நிற்பதான அனல் வடிவு நம்மனோர் கட்புலனுக்கு மூன்று திறமாய்ப் பிரிந்து விளங்கு கின்றது அவைதாம் பகலவனுந் திங்களுந் தீயுமேயாகும். அம் மூன்றிலுந் தோன்றா நின்ற ஆண்ட வனைப் பண்டை நம் செந்தமிழ்ச் சான்றோர்கள் வழி பாடாற்றிய வகை வருமாறு: தூயதொரு நிலத்தே தீயினுக்கு அடையாளமாக முக்கோண வடிவொன்று கீறி, அதனுள்ளே பகலவனுக்கு அடையாள மாக வட்ட வடிவொன்று வரைந்து, அவ்வட்டத் தினுள்ளே திங்களுக்கு அடையாளமாகப் பிறைவடிவொன்று தீட்டி, அங்ஙனம் அமைக்கப்பட்ட முக்கோண வட்டத்தில் தீ வளர்த்து அத்தீயின் பக்கத்தே கிழக்கு நோக்கிய படியாய் இரண்டு புது மட் குடங்களை நிறீஇ, அவ்விரண்டிலுள்ளே தூயபுனலை நிரப்பி, அக்குடங்களின் வாய்களில் மாவிலைகளுந் தேங்காயும் வைத்து, அவையிற்றுக்கு மலர் மாலையும் பிறவுஞ் சாத்துவர். அதன்பிற் றீயிலே நெய்யைச் சொரிந்து, அது கொழுந்து விட்டு எரியுங்கால், அதன்கண் முனைத்து ளங்கா நின்ற முதல்வனை அதற்கு எதிரே அமைந்துள்ள இரண்டு குடங்களின் நீரிலும் புகுந்து விளங்கி நிற்குமாறு வேண்டுவர்.

அங்ஙனம் பலகாலும் வேண்டியபின் அக்குடங்கள் இரண்டினையும் எடுத்துக் கல்வடிவு செம்பு வடிவுகளில் அமைப்பித்த சிவலிங்கத் திருவுருவின் மேற்சொரிந்து, அங்ஙனஞ் சொரியுங்கால் அந்நீரில் விளங்கும் இறைவன் அச்சிவலிங்கத்தினுள்ளும் புகுந்து முனைத்து நின்று விளங்கு மாறு வேண்டா நிற்பர். அவ்வாறு செய்து வேண்டியபிற் சிவலிங்கத்தின்கண் இறைவன் முனைத்து நின்று அருள் செய்கின்றான் என்பது நம் பண்டை யாசிரியரது கோட் பாடாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/224&oldid=1591194" இலிருந்து மீள்விக்கப்பட்டது