உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

-

மறைமலையம் - 27 ×

தற்கு அறிவுடைய உயிர்ப்பொருள்கள் இருத்தலின் அவையே போதும், அவற்றினும் வேறாகக் கடவுளென்று வேறோ ரறிவுப் பொருள் வேண்டப்படுதல் எற்றுக்கு எனச் சாங்கிய மதத்தார் கூறுபவாலோ வெனின்; அவர் கூற்றும் அடாது; ஏனென்றால், அறிவில்லாப் பொருளின் நிலைகளும், அவற்றின் எல்லை காணப்படாத பரப்புகளும், அப்பரப்பு களில் த எல்லையில்லாமல் அடங்கிக் கிடக்கும் எண்ணிறந்த பொருள்களுஞ் சிற்றறிவு சிறு தொழில் களுடைய சிற்றுயிர் களால் எங்ஙன மியக்கப்படக் கூடும்? இந்த நிலவுலகத்தின் ஒருசிறிய விடத்திலிருக்கும் ஒருவன், சில காலிருந்து சில காலத்தின் மாய்ந்து போகின்ற வனாயுந் தான் உயிரோடிருக்குங் காலத்திலும் பலவகை நோய்களாற் பற்றப்பட்டு அந்நோய் தீர்த்தற்குப் பலவகை மருந்துகளாகிய பருப்பொருளுதவியை வேண்டி நிற்பவனாயுந் தான் உயிர் பிழைத்து வாழ்தற்கு அரிசி, பருப்பு, பால், நெய் முதலான பருப்பொருட் பண்டங்களி னுதவியை இன்றியமையாது வேண்டி நிற்பவனாயுந் தன் கண்ணெதிரே அருகிலிருக்கும் இடங்களையும் பொருள்களையு மன்றித்தன் கட்பார்வைக்குப் புறத்தே அருகிலிருக்கும் பொருள்களையுந் தன் கட்பார்வைக் கெட்டாத் தொலைவி லுள்ள பொருள்களையுங் காண மாட்டாதவனாயும், நேரே

அருகில் உள்ள பொருள்களுள்ளும் மிகச் சிறியனவா

யிருப்பனவற்றைத் தெரிந்து கொள்ள மாட்டாதவனாயும், மிகப் பெரியன வாயிருக்குஞ் சுமைகளையும் பொருள்களையும் பிறருடைய பிற கருவிகளி னுடைய உதவியின்றி அசைக்கமாட்டாதவனாயும் இருத்தலின், இவனது அறிவிற்கும் இவனது ஆற்றலுக்கும் எட்டாத இந்நிலவுலகமாகிய பெரும் பருப்பொருளை இவன் றன்னறிவு கொண்டுந் தன் வலிமை கொண்டும் எங்ஙன மியக்க மாட்டுவான்?

பருப்பொருளாகிய இந்நிலவுலகஞ் சிறிது அதிர்ந் தாலும் தன்கண் உள்ள உள்ள எரிமலைகள் வெடித்து நெருப்பைக் கக்கினாலும் இதன் கணுள்ள ஆறுங் கடலும் வெள்ளம் பெரு கினாலும், இதன்கண் உலவுங் காற்றுச் சூறாவளியாய்ச் ழ ன்று அடித்தாலும் மக்களாகிய சிற்றுயிர்களும், சிற்றுயிர்களா லமைக்கப்படும் நாடு நகரங்கள்

சு

ச்

மாட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/267&oldid=1591237" இலிருந்து மீள்விக்கப்பட்டது