உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

-

மறைமலையம் - 27

தொலைவிலே இவற்றினும் பல்லாயிர மடங்கு பெரியன வாய்ச் சுழன்று செல்லும் எண்ணிறந்த வான்மீன் மண்டிலங் களையும் எங்ஙனம் படைக்கவும் இயக்கவும் வல்லராவர்? இத்தனை கோடியுலகங்களையுஞ் சிற்றுயிர்களாகிய நாம் படைக்க மாட்டுவேம், இயக்க மாட்டுவேம், அழிக்க மாட்டு வேம் என்று எவரேனுங் கூற முன் வருவராயின் அவரை மைத்துனர் பல்கி மருந்திற் றெளியாத பித்தனென் றெள்ளிச் சிறுமகாரும் நகையாடு வரன்றோ?

ஆகவே, சிற்றறிவினரான உயிர்கள் தாமாகவே மாயையை இயக்கி, அதனிலிருந்து தம்முடம்புகளையும் உலகங்களையும் வ்வுலகத்துப் பல பண்டங்களையும் படைத்துக் கொள்ள மாட்டுவரென்னுஞ் சாங்கியருரை, பிறந்த குழவி தன் தாயினால்எடுத்து அணைக்கப்படாமல் தானாகவே பாலிருக்குமிடந் தேடி அதனைப் பருகுமென்று கூறுவாருரையோ டொத்து நகையாடற் பாலதாய் முடியும், ஆதலால், அறிவில் பொருள்கள் எல்லாவற்றிற்கும் முதற் காரணமாகிய மாயையை இயக்கி அதன்கணிருந்து சிற்றுயிர்க ளெல்லாவற்றிற்கும் அவ்வவற்றின் இயற்கைக்கு இணங்கப் பலவேறு வகையான உடம்புகளையும் அவைகள் நுகருதற்குப் பலவேறு வகையான பண்டங்களையும் அவைகள் இருந்து உயிர்வாழ்தற்குப் பல்வேறு வகையான உலகங்களையும் முன்னறிந்து அமைத்து வைத்தற்கு எல்லா அறிவும் எல்லா ஆற்றலும் எல்லா முதன்மையும் எல்லா இரக்கமும் ஒருங்குடையனாகிய ஒரு முழுமுதற் கடவுள் இன்றியமையாது வேண்டப்படுவனென்பது தெளிந்த முடிபாமென்றுணர்ந்து கொண்மின்கள்! ஆனது பற்றியே, இராமலிங்க அடிகளார் "எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும்” இறைவனாகிய சிவ பிரான் உண்டென்பதனை மேலைத்திருப்பாட்டில் நன் கெடுத்து அறிவுறுத்தருளினார்

வ்

இனி, அப்பெற்றியனான இறைவன் பொருள்களி னுள்ளும் புறம்பும் இருப்பனென்று கூறியதென்னை? இ வ் விரண்டின் புறத்தே உருவுடையனாய் இருந்தே இவை தம்மை இயக்கமாட்டுவான் என்று துவிதவாதிகள் கூறுதல் போலாவது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/269&oldid=1591239" இலிருந்து மீள்விக்கப்பட்டது