உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

66

❖ - ❖ மறைமலையம் – 27

"அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற

உருவமோ உரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங்

அருவமும் உருவா ரூப மானது மன்றி நின்ற

கென்னின்

உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே"

என்றும், அருளிச் செய்தனர்கள் வடமொழியில் ஈசாவாசி யோபநிடதமும்,

66

அவனைக் கண்டு எல்லாம் நடுங்குகின்றன அவனெதற்கும் நடுங்குவதில்லை

அவன் எல்லாவற்றிற்குந் தொலைவிலிருக்கின்றான் அவன் எல்லாவற்றிற்கும்அருகிலு மிருக்கின்றான் அவன் எல்லாவற்றின் உள்ளு மிருக்கின்றான் அவன் எல்லாவற்றின் வெளியிலு மிருக்கின்றான்

وو

என்று இவ்வுண்மையினையே நன்கெடுத்து மொழிவ தாயிற்று.

இனி, இங்ஙனம் பொருள்களின் உள்ளும் புறம்பும் உயிர்களின் உள்ளும் புறம்பும் நிறைந்திருப்பானான றைவனியல்பு உணர்த்துவான் புகுந்து, அவன் இயற்கை யுண்மையும் இயற்கை யறிவும் இயற்கையின்பமும் வாய்ந் தானாகி யிருப்பனென அடிகள் மொழிந்திட்டார். இறை வனியல்பு இப்பெற்றியதாமெனவே, இறைவனது உதவியை அவாய் நிற்கும் பொருள்களும் உயிர்களும் அங்ஙனம் இயற்கையிலேயே உண்மையும் அறிவும் இன்பமும் வாயாவா யிருக்கு மென்பதும் அறிவித்தாராயிற்று, இனி, இம் மூன்று தன்மைகளின் இலக்கணங்களும், பொருள்களும் உயிர்களும் இவைதம்மை இயற்கையிலேயே யுடையவாகாமையும் இறைவனொருவனே இவைதம்மை இயற்கையே யுடையனா தலும் இறைவனைச் சார்ந்தே உயிர்கள் அவை மூன்றும் நிலையாக எய்தப் பெறுதலும் முறையே விளக்கிச் செல்வாம்

முதற்கண் ‘உண்மை’ என்பது ‘என்றும் ஒருபடித்தாய் நிற்கும் மாறாநிலையே' யாகும், நமதறிவுக்குப் புலனாகும் பொருள்களுள் ஒன்றாயினும் மாறா நிலையினதாய் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/271&oldid=1591241" இலிருந்து மீள்விக்கப்பட்டது