உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

247

படித்தாய் நிற்கக் காண்கின்றோமா? இல்லை இல்லை நாம் யிர்வாழ்தற்கு இடமாயுள்ள இம்மண்ணுலகு எத்தன்மைய தாயிருக்கின்றது? ஒரு காலத்து மேடாயிருந்தது பள்ளமா கின்றது. பள்ளமாயிருந்தது மேடாகின்றது; பண்டைக் காலத்திற் சிறந்த நாகரிகமுடையதாய் விளங்கிய குமரி நாடு இப்போது கடலுள் அமிழ்ந்திக்கிடக்கின்றது; கடலுள் மறைந்து கிடந்த எத்தனையோ நிலப்பகுதிகள் இப்போது கட ல் நீருக்கு மேற் பல தீவுகளாய்க் கிளம்பியிருக்கின்றன. எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன் நாகரிகத்திற் சிறந்த மக்களால் எகுப்தி நாட்டில் அமைக்கப்பட்ட பெரியபெரிய நகரங்களும் அந்நகரங் களிலமைக்கப்பட்ட பெரியபெரிய

அரண்மனைகளும்,

பெரிய பெரிய கோயில் களும், அங்ஙனமே சாலடி நாட்டில் ‘ஊர் என்னுந்தலைநகரில் எடுப்பிக்கப்பட்ட மிகப் பரிய அரண்மனைகளும், மிகப்பெரிய கோயில்களும், அங்ஙனமே நமது இவ்விந்திய நாட்டின் வடமேற் பகுதியிற் குடியேறிய பண்டைத்தமிழ் மக்களால் தலைநகராக அமைக்கப்பட்ட ‘அரப்பா' என்னும்

டமும் அதன்கண் இருந்த அரண் மனைகள் கோயில்களும் மண்மூடுண்டு, இப்போது மேல் நாட்டு நன்மக்களால் நிலத்தினின்றும் அகழ்ந்தெடுத்துக் காட்டப்படுகின்றன, முன்னொருகால் மேல்நாடு முழுமையுந் தம் செங்கோல் நீழலில் இனிது வைக அரசு செலுத்திய உரோம வேந்தர்க்குத் தலைநகரா யிருந்த பழைய உரோம நகரின் மிக வியக்கத்தக்க மாட மாளிகைகள் அழிந்து பாழாய்க் கிடத்தலை இப்போதுந் திரள் திரளான மக்கள் சென்று பார்த்து வருகின்றனர்.

இங்ஙனமே இத்தமிழ் நாட்டகத்தும் பழங்காலத்திருந்த தமிழ் வேந்தர் அமைத்தஅரண்மனைகளுந் திருக்கோயில் களும் டிந்துபாழாய்க் கிடத்தல் திருவாரூர், கங்கை கொண்ட சோளேச்சுரம், மகாபலிபுரம், செஞ்சி,வேலூர் முதலிய இடங்களில் இன்றும் எல்லாருஞ் சென்று பார்த்து வருகின்றனர், வைகை முதலிய யாறுகளும் முற்காலத்து ஓடிய வழிமாறி ஓடுகின்றன. மிகப் பழைய நாளில் வடநாட்டில் ஓடிய சரசுவதி என்னும்யாறும் இப்போதுஇல்லாமலே போயிற்று. முன்னில்லாத பல யாறுகள் பின்னர் புதியவாய்த் தோன்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/272&oldid=1591242" இலிருந்து மீள்விக்கப்பட்டது