உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் - 27

ஓடா நிற்கின்றன, நாம் உறையும் இந் நில மண்டிலமே வரவரக் குளிர்ந்து வருகின்றதென்றும், இன்னும் பல்லாயிர நூற்றாண்டுகள் கழிந்தபின் மக்களும் பிறவுயிர் களும் உயிர் வாழ்தற்கே இசையாதாய் இதுமாறு மென்றும் நில நூல் வல்லார்கள்பெரிதாராய்ந்து உரைக்கின்றனர்,

நமக்குஇரவில்

ப்போது ஒளியைத்தரும் நிலா மண்டிலமானது பன்னூறாயிர ஆண்டுகளுக்கு முன்உயிர் வாழ்க்கைக்கு இடமாயிருந்து, பின்னர் வரவரக் குளிர்ந்து உயிர் வாழ்தற்கு ஏலாத இயல்பினதாய் மாறியிருக்கின்ற தென வான்நூலாசிரியர்கள் நுவல்கின்றனர். இன்னும் கண்களுக்கு ஆலம்வித்துப் போலவும்மின்மினியொளி போலவுந் தோன்றா நின்ற எத்தனையோ பெரிய பெரிய உலகங்களிற் பற்பல முன்னரே அழிந்துபட்டனவாயும் வேறு பல புதிது தோன்றின வாயும், மற்றும் பல அழிந்தொழியும் நிலைமையில் இருப்பன வாயும் பற்பல மாறுதல்கட்கு உட்பட்டனவாய்ச் செல்கின்றன வென்னும் உண்மை வான்நூல் ஆராய்ச்சியாற் புலனாய்க் காண்டிருக்கின்றது, நாம் நுகரும் பண்டங்கள் நாம் புழங்கும்

ஏனங்கள்

முதலாயினவெல்லாம் நாளேற நாளேறத் தமதுகட்டுச் சிதைந்துந் தேய்ந்தும் அழிந்து போதல் போலவும், நமக்கு நெருங்கிய தொடர்புடைய நம்முடம்பும் நாளேற நாளேற நரை திரை மூப்புப் பிணிகள் உடையவாகிக் கட்டுத் தளர்ந்து நம்மைவிட்டு அழிதல்போலவும், இவ்வுலகமும் இவ்வுலகத்தைச் சூழ்ந்த எண்ணிறந்த உலகங்களும் அவற்றின் கண் உள்ள அளவிலாப் பண்டங்களும் ஒரு காற்றோன்றிச் சிலகால் இருந்து பிறிதொருகாற் கட்டுக் குலைந்து காணாமற் போய் விடுகின்றன, ஆகவே, மிகச் சிறியதுமுதல் மிகப் பெரிய தீறான எல்லா வகையான உயிரில்லாப் பொருள்களும் ஒரே நிலையாக இருக்க மாட்டாதனவாய்ச் சிதைந்தொழிந்து போதலால், அவைகளை ஒரே நிலையிலுள்ள உண்மைப் பொருள்களாகக் கூறுதல் இயலாது.

சிறிது

இனி, னி, உயி உயிருடை ய பொருள்களின் ள்களின் நிலை ஆராயற்பாற்று, உயிருடையவைகள் எல்லாம் அறிவுடை யனவாய் இருந்தும், அவற்றின் அறிவு என்றும் ஒரே தன்மைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/273&oldid=1591243" இலிருந்து மீள்விக்கப்பட்டது