உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* சைவ சித்தாந்த ஞான போதம்

6

249

தாகச் சுருங்குதல் விரிதலின்றி என்றும் ஒரே அளவினதாக, அகவிருளால் இடையிடையே பற்றப்படாத னவாக விளங்கக் கண்ட துண்டோ? நாம்சிறு மகவாயிருந்த ஞான்று நமதறிவு எந்நிலையிலிருந்த தென்பது நமக்கே விளங்கவில்லை, ஆனாலும், எத்தனையோ சிறு மகவுகளை நாம் நம் கண்ணெதிரே கண்டு, அவற்றின் இயல்பை உற்றுநோக்குதல் கொண்டு, அவற்றின் அறிவு ஏதோ ஒரு பேரிருளாற் கவரப்பட்டிருக்கின்றதென்றுந் தாய் தந்தையர் உ ன் பிறந்தார் நேயர் ஆசிரியர் முதலான பிற அறிவுடை யுயிர்களின் சேர்க்கையிலிருந்து அம்மகவுகள் சிறிதுசிறிதாக அவ்விருள் நீங்கி அறிவு விளங்கப் பெற்று வருகின்றன வென்றுந் தெரிந்து கொள்கின்றோ மாதலால், நாமுஞ் சிறு குழவிகளாய் இருந்த ஞான்று ஏனைக் குழவிகளைப் போலவே நம்மை இன்னாரென்றும், நம்மைச் சூழ்ந்தவர் இன்னாரென்றும், நம்மைச் சுற்றியுள்ள ள பண்டங்கள் ன்னவையென்றும் உணரமாட்டாதவர்களாயிருந்தோம் பதை ஐயமறத் தெளிந்து கொள்கின்றோம்.

என்பதை

து மட்டுமோ நாம் ஆண்டில் முதிர்ந்தவர்களாய்க் கல்விப்பயிற்சியாற், பேரறிஞர் சேர்க்கையால் அறிவு விளங்கப்பெற்ற பின்னும், நமதறிவு ஒருதன்மைத்தாய் விளங்குவதின்றிப் பல்வேறு மாறுதல்களின் வயப்பட்டு, நம்மை இடையிடையே துன்புறுத்தி வரக் காண்கின்றேம் அல்லேமோ? நேற்று அறிந்தவைகளிற் சென்றகிழமையில் அறிந்தவைகளிற், போன திங்களில் அறிந்தவைகளிற், கடந்த ஆண்டு அறிந்தவைகளில் எத்தனை கோடி நினைவுகள் எத்தனைகோடி எண்ணங்கள் நம்மறிவுக்குத் தென் படாமலே மறைந்து போயின! முன்னறிந்தவைகளை இங்ஙனம் நாம் மறந்து மறந்துபோதலால் நமக்கு வரும் இடர்களுக்கு, நம்மாற் பிறர்க்கு வரும்இடர்களுக்கு ஒரு கணக்குண்டோ! முன்னறிந்த வைகளை மறத்தலாற், நிகழ்ந்தவைகளை நிகழ்ந்தபடியே சொல்ல மாட்டாதவர்களாய்ப் பார்த்த பொருள் கேட்ட பொருள் சுவைத்த பொருள் இயல்புகளை அப்பார்த்த கேட்ட சுவைத்த படியே நினைவு கூர்ந்து சொல்லமாட்டாத வர்களாய் பொய்த்துப் பிழைபடுகின்றனம் அல்லமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/274&oldid=1591244" இலிருந்து மீள்விக்கப்பட்டது