உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 27.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம் 27

-

-

கடந்தவற்றையறியும் அறிவிற்றான் இத்தகைய மாறுதல்கள் நிகழ்கின்றன வென்றாலும், இப்போது நம் கண்ணெதிரே நிகழ்வனவற்றிலாவது நமதறிவு பொய்படு தலின்றி மெய்யாக அறிதல் செய்கின்றதா? அதுவும் ல்லையே! நாம் நேரே காண்கின்ற பொருளையும் ஆராய்ந்து பார்த்தாலன்றி ஐயமறத் தெளியமாட்டாதவர் களாய் இருக்கின்றோம், ஒருதுண்டு செம்பையும் ஒருதுண்டு பொன்னையும் பளிச்சென்று தோன்ற விளக்கிக் கையிற் கொடுத்தால், அவை யிரண்டற்குமுள்ள வேறு பாடு தெரியாமல் எத்தனை பேர் ஏமாந்து போகின்றனர்! தித்திப்பான நாரத்தம்பழங் கொடி முந்திரிப்பழம் முதலியன வாங்குபவரில் எத்தனைபேர் அவற்றை நன்கு ஆய்ந்து பாராமல் வாங்கித்தாம் வாங்கியவை

தாம்

சார்ந்த

தித்திப்புக்கு மாறான புளிப்புடையவாயிருத்தலைக் கண்டு ஏமாந்து போகின்றனர். மருத்துவரில் எத்தனைபேர் நோயாளிகளின் நோயின் றன்மையை யறியாமல் மாறான மருந்துகளைக் கொடுத்து அவர் கொண்ட நோயை மிகுத்து அவரையுங் கொல்லு கின்றனர்! கணக்கரில் எத்தனைபேர் தவறாகக் கணக்குச் செய்துதாமும் பிழைபட்டுத். செல்வரையுங் கெடுத்துவிடுகின்றனர்! சமையற் றொழில் செய்வாரில் எத்தனைபேர் காலமும்இடமும் உணவெடுப்பார் உடல் நிலையும் ஆய்ந்து பாராமல் உணவு சமைத்துக் கொடுத்து, அதனையுண்பார்க்குப் பல கொடு நோய்களை யெல்லாம் வருவித்து விடுகின்றனர்! நூல் எழுதுவாரில் எத்தனைபேர் காலப்போக்கு மக்கள் முன்னேற்றங் கருதிப் பாராமற் பயனற்ற பொருள்களை எழுதி மக்களறிவு வளர்ச்சியைப் பாழ்படுத்து கின்றனர்! அவருள் எத்தனைபேர் தாம் வழங்கும் மொழியைத் திருத்தமாகப் பயிலாமற் சொற்குற்றஞ் சொற்றொடர்க் குற்றம் பொதுள எழுதியும், அயன்மொழிச் சொற்களை அடுத் தடுத்துக் கலந்தும் அதன் தூய வழக்கை மாய வைக்கின்றனர்? இன்னும் இங்ஙனமே நம் மக்களிற் பெரும்பாலார் - அவர் கற்றவராயினுங் கல்லாதவராயினுந், தங்கண்ணெதிரே காண்பனவுஞ் செய்வனவுமெல்லாம் உண்மைக்கு மாறாகப் பிழைபடச் செய்துதாந் துன்புறுவ தொடு பிறரையுந் துன்புறச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_27.pdf/275&oldid=1591245" இலிருந்து மீள்விக்கப்பட்டது